களுதாவளை மகாவித்தியாலயத்தின் வருடாந்த இல்ல மெய்வல்லுனர் திறனாய்வுப்போட்டி

(க.விஜயரெத்தினம்) களுதாவளை மகாவித்தியாலயத்தின் வருடாந்த இல்ல விளையாட்டுப்போட்டி நேற்று வெள்ளிக்கிழமை பிற்பகல் இரண்டு மணியளவில் அதிபர் சிவகுரு அலோசியஸ் தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் பிரதமஅதிதியாக கிழக்கு மாகாண கல்வி ,விளையாட்டு, காணி,போக்குவரத்து அமைச்சின் செயலாளர் ஜே.எஸ்.ரீ.அசங்க அபேவர்த்தன அவர்களும்,கௌரவ அதிதிகளாக கிழக்கு மாகாண விவசாய அமைச்சின் செயலாளர் கே.சிவநாதன்,கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர் கே.கருணாகரன், களுவாஞ்சிடி பிரதேச செயலாளர் எம்.கோபாலரெத்தினம், பட்டிருப்பு வலய பிரதிக்கல்விப்பணிப்பாளர் எஸ்.ஞானராசா, கோட்டக்கல்விப்பணிப்பாளர் ரீ.திரவியராசா, மற்றும் ஆசிரியர்கள்,மாணவர்கள் ,பொதுமக்கள். பெற்றோர்கள், பாடசாலைஅபிவிருத்திச்சங்கத்தினர்,கலந்து கொண்டனர்.நாவலர்,பாரதி,விபுலானந்தர் என மூன்று இல்லங்களுக்கிடையில் மிகவும் நேர்த்தியான முறையில் சர்வதேச விளையாட்டுப்போட்டி போன்று நடைபெற்றது.

இரண்டு வாரங்களாக போட்டிகள் நடைபெற்று  இறுதி நிகழ்வுகள் நேற்று நடைபெற்றது.132, விளையாட்டுகளுடன்,இல்லச்சோடனை,அணிநடை,போன்ற  முடிவுகளின் படி 667புள்ளிகளைப் பெற்று விபுலானந்தா இல்லம்  முதலாம் இடத்தினையும் ,591புள்ளிகளைப் பெற்று பாரதிஇல்லம்  இரண்டாம் இடத்தினையும், 503புள்ளிகளைப்பெற்று மூன்றாம் இடத்தினை நிலைப்படுத்தப்பட்டது.