மட்டக்களப்பு விமானப்படை முன்பள்ளி நிலையத்தின் வருடாந்த விளையாட்டுப் போட்டி - (Photos )

(Satheesh)
மட்டக்களப்பு விமானப்படையினரின் நிருவாகத்தின் கீழ் இயங்கிவரும் முன்பள்ளி நிலையத்தின் வருடாந்த விளையாட்டுப் போட்டி நிகழ்வு நேற்று 17ஆம் திகதி இடம்பெற்றது.

இந் நிகழ்வில் பிரதம அதிதியாக மட்டக்களப்பு விமானப்படையின்  கட்டளை தளபதி புத்திக பியசிறி  ( wing commander Buddhika Piyasri )  கலந்து சிறப்பித்தார்.

இந் நிகழ்வுக்கு சினோமன் எயார் (cinnamon air) நிறுவனத்தின் தலைமை பொறுப்பதிகாரி   மற்றும் அதன் உத்தியோகத்தர்கள் அணுசரணை வழங்கினர்   

கடந்த 2013ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இந் நிலையத்தில் விளையாட்டுப் போட்டி வருடா வருடம் நடைபெற்று வருகின்றது. இங்கு கல்விகற்கும் மாணவர்களுக்கு வுடாந்த தவணைப்பணம் மாத்திரமே அறவிடப்பட்டு வருகின்றது. ஏனைய சீருடை, புத்தகங்கள் உள்ளிட்ட செலவுகள் அனைத்தும் விமானப்படையினரே வழங்குகின்றனர்.

சமுக சேவையினை நோக்காகக் கொண்டு சமுகத்திற்கு நல்லனவற்றை செய்யும் முகமாக இச் சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

 மற்றும், இங்கு தமிழ், சிங்களம், ஆங்கிலம் ஆகிய மொழிகளில் பாடங்கள் கற்பிக்கப்படுகின்றது, இந்த முன்பள்ளி மூலம் சிறுவர்களை ஆரம்பகல்வி மற்றும் நற் பழக்கங்களை கற்று ஒரு நற்பிரஜையாக கொண்டுவரும் நோக்கே எமது பிரதான நோக்காகும் என இம் முன்பள்ளிக்கு பொறுப்பான விமானப்படை அதிகாரி தெரிவித்தார்.

இவ் விளையாட்டு நிகழ்வில் கலந்துகொண்ட மாணவர்கள் அனைவருக்கும் சினோமன் எயார் (cinnamon air) நிறுவனத்தின் உதவியுடன் பெறுமதிமிக்க பரிசுகளும் வழங்கப்பட்டது.

இந் நிகழ்வில் மாணவர்களின் பெற்றோர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.