மாற்று திறனாளிகளுக்கான சக்தியூட்டும் நடன நிகழ்ச்சி

(சிவகுமார்)

மாற்று திறனாளிகளை உளவியல் மற்றும் உடல் ரீதியாக வலுவூட்டும் நடன நிகழ்வு 2017.0702 அன்று கல்லடி கடற்கரையில் மிகவும் உற்சாகத்துடன்  நடை பெற்றது  .கிழக்கு பல்கலைக்கழகத்தின் இசை நடனக்கல்லூரியும் , அமெரிக்க மிஷன் தேவாலயமும் அனுசரணை வழங்கி இருந்தன .

பல நூற்றுக்கணக்கான பார்வையாளர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
நடன நிகழ்ச்சிகளை கவிஸ்கா உடரங்க கல்தேர நெறி படுத்தினார் ..பிராந்திய இணைப்பாளர் கமல் ஜானக இசையமைப்பாளராக பணியாற்றினார் .

ஜெர்மனிய இலாப நோக்கமற்ற  VIS ABILITY   என்ற      நிறுவனத்தினரால்  மாற்றுதிறனாளிகளுடன் ,மாற்று திறனாளிகள் அல்லாதோரையும் இணைத்து இந்த  வலுவூட்டும் நிகழ்வு நடத்த பட்டது.

இந்த தொண்டர் நிறுவனத்தின்  முக்கிய குறிக்கோள் ,    எந்த வித பாரபட்சமும் இன்றி  சமூகத்தில் மாற்று திறனாளிகள் ஏனையோரை போன்று கௌரவமாக தன்னம்பிக்கையோடு  சமூகத்தில் சம உரிமையோடு சுதந்திரமாக  வாழ வேண்டும் என்பதே.

மாற்று  திறனாளிகளை அவமானப்படுத்துவது ,ஒதுக்குவது அவர்களை மேலும் உளவியல் ரீதியாக இன்னும் மிகவும் பாதிப்படைய செய்யும். இவர்களுக்கு பாடசாலைக்கல்வி,தொழில் பயிற்சி  மற்றும் வேலை  வாய்ப்பு ஏற்படுத்தி  கொடுப்பது  சமூகத்தில் உள்ள ஒவ்வொருவரின் கடமையாகும் .