ஆலயத்தின் பெயரால் நிதி வசூலிக்கும் மோசடிக் கும்பல் தொடர்பில் மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

(-க. விஜயரெத்தினம்)
மட்டக்களப்பு புன்னைச்சோலை ஶ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலயத்தின் பெயரைக்கூறி ஆலயத்துடன் தொடர்பில்லாத  சிலர் மட்டக்களப்பு நகரிலும், வௌிப் பிரதேசங்களிலும் நிதி வசூலித்துள்ளதால் மேற்படி மோசடிகாரர் தொடர்பில் எச்சரிக்கையுடன் இருக்குமாறு  ஆலய நிருவாகத்தினர்  ஞாயிற்றுக்கிழமை 27ஆம் திகதி  தெரிவித்துள்ளனர்.

புன்னைச்சோலை ஶ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலய உற்சவம் எதிர்வரும் யூன் 10ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள நிலையில் இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி மட்டக்களப்பு நகரில் கடந்த 25, 26ஆம் திகதிகளில் ஒரு சில வர்த்தக நிலையங்களிலும் ஒரு சில தனி நபர்களிடமும் இம் மோசடிக்காரர்களால் நிதி வசூலிக்கப்பட்டிருக்கின்றது.
எனவே இவ்வாறு ஆலயத்தின் பெயரால் நிதி அல்லது பொருட்கள் வசூலிக்க வருபவர்களிடம் ஆலய பற்றுச் சீட்டினை பெற்றுக்கொள்வதுடன் சந்தேகம் எழும் பட்சத்தில் எமது 065 2225359, 0779083283 ஆகிய தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்புகொளுமாறும் ஆலய நிருவாகத்தினர் தெரிவித்துள்ளனர்.
மேற்படி தமது ஆலயத்தின்  பெயரைச் சொல்லி இடம்பெற்றுவரும் மோசடி  சம்பவம் தொடர்பில் பொலிஸ் முறைப்பாடு மேற்கொள்ள நடவடிக்கை எடுத்துவருவதாகவும் ஆலய நிருவாகத்தினர் தெரிவித்தனர்.