சீரற்ற காலநிலை காரணமாக கிழக்கு பல்கலைக்கழகத்தின் அறிவிப்பு!


யாழ்ப்பாணம் மற்றும் கிழக்கு பல்கலைக்கழகங்களில் இன்றைய  தினம் நடத்தப்படவிருந்த மொழிபெயர்ப்பு கற்கைகள் பாடநெறிக்கான தெரிவுப் பரீட்சைகள் மறு அறிவித்தலின்றி பிற்போடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

நாட்டில் தற்போது நிலவும் சீரற்ற வானிலை காரணமாக இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், புதிய திகதி தொடர்பான விபரம் பின்னர் அறிவிக்கப்படும் என்றும் பல்கலைக்கழக பதிவாளர் தெரிவித்துள்ளார்.