சுவிஸ் உதயத்தின் நிருவாகசபை மற்றும் உயர் மட்டக் குழுவினர்களுக்கிடையிலான சந்திப்பு- வேண் நகரில்.

(சா.நடனசபேசன்)
சுவிஸ் உதயத்தின் நிருவாகசபை மற்றும் உயர் மட்டக்குழுவினர்களுக்கிடையிலான சந்திப்பு சுவிஸ் நாட்டின் வேண் Bern மாநகரில் 11 ஆம்திகதி திங்கட்கிழமை நடைபெற்றது.

இக் கூட்டத்தின்போது  கிழக்குமாகாணத்தில் பல்கலைக்கழக மாணவர்களுக்கு சுவிஸ் உதயத்தின் மூலம் வழங்கப்படுகின்ற மாதாந்த மானியக் கொடுப்பனவு தொடர்பாகவும், சுவிஸ் உதயத்தின் 14 ஆவது ஆண்டுவிழா தொடர்பாகவும் ஆராயப்பட்டது.

மற்றும் விஷேட கொடுப்பனவு பற்றியும் சுவிஸ் உதயத்தின் மட்டக்களப்பு திராய்மடு காணியின் அபிவிருத்தி தொடர்பாகவும் ஆராயப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இக் கூட்டத்தொடரில் சுவிஸ் உதயத்தின் தலைவர், செயலாளர், பொருளாளர் உட்பட நிருவாக உறுப்பினர்களும் கலந்து சிறப்பித்தனர்.