கடந்தகால போர்ச்சூழலினல் பாதிக்கப்பட்ட மக்களை ஆற்றுப்படுத்தி பெண்கள் தலைமை தாங்கும் குடும்பங்களுக்கு சுயதொழில் வாய்பினை ஏற்படுத்தும் நோக்குடன் மட்டக்களப்பு- களுவன்கேணி கரையோரப் பிரதேசத்தில் அமைக்கப்பட்ட மகிழ்ச்சிப் பூங்கா 13.07.2025 சம்பிரதாயபூர்வமாகத் திறக்கப்பட்டது.
ஏறாவூர்ப்பற்று செங்கலடி பிரதேச செயலாளர் கே தனபாலசுந்தரம் இந்நிகழ்வில் பிரதம அதிதியாகக்கலந்துகொண்டார்.
ஜேகேஜி அமைப்பின் தலைவர் திருமதி துரைராஜா சுபத்திரா தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் அரச மற்றும் தன்னார்வத் தொண்டர் நிறுவனங்களின் அதிகாரிகள் பலர் கலந்துகொண்டனர்.
கிழக்கு மாகாணத்திற்கு வரும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு உல்லாசப் பயணிகளைக் கவரக்கூடிய வகையில் இப்பூங்கா அமைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
எனினும் கடந்தகால போர்ச்சூழலின்பொது பாதிக்கப்பட்ட குடும்ப உறுப்பினர்களுக்கு சுயதொழில் வாய்ப்பினை ஏற்படுத்துவது , சிறுவர்கள் மற்றும் வயதானவர்கள் தமது ஓய்வுநேரத்தினை மகிழ்ச்சியாகக் கழிப்பது போன்ற வியடங்களைக் கருத்திற்கொண்டு இப்பூங்கா அமைக்கப்பட்டுள்ளதாக ஜேகேஜி அமைப்பின் முகாமைத்துவப்பணிப்பாளர் துரைராஜா ஜெயகுமார் தெரிவித்தார்.
பூந்தோட்டம், மிதிக்கும் படகுச் சேவை, விளையாட்டு முற்றம் மற்றும் களியாட்ட மைதானம் உள்ளிட்ட பல அம்சங்கள் இங்கு காணப்படுகின்றன.
. .
அதிகம் வாசிக்கப்பட்டவை - 7 நாட்கள்
LATEST NEWS
10/recent/recentPost
குற்றம் - CRIME NEWS
6/crime/block_4