இஷாரா செவ்வந்தியின் தாயார் சிறையில் மரணம்


கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கில் பிரதான சந்தேக நபரான இஷாரா செவ்வந்தியின் தாயார் வெலிக்கடை சிறைச்சாலையில் உயிரிழந்துள்ளார்.

அவர் கடந்த வெள்ளிக்கிழமை (11) மாரடைப்பு காரணமாக மரணமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இஷாரா செவ்வந்தியின் தாயார் மற்றும் சகோதரர் இருவரும் கொலைக்கு உதவிய குற்றச்சாட்டில் முன்னதாக கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டனர்.

இந்நிலையில், தலைமறைவாக உள்ள இஷாரா செவ்வந்தியை கண்டுடித்து கைது செய்ய பொலிஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.