தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் தொடர்பான கலந்துரையாடல்

தியாக தீபம் திலீபனின் 31வது ஆண்டு நினைவேந்தல் வணக்க நிகழ்வு ஏற்பாடு தொடர்பிலான கலந்துரையாடல் வெல்லாவெளியில் இடம்பெற்றது.


இதில் மண்முனை மேற்குப் பிரதேசசபைத் தவிசாளர் சி.புஸ்பலிங்கம், மண்முனை தென் எருவில் பற்றுப் பிரதேசசபைத் தவிசாளர் ஞா.யோகநாதன், போரதீவுப் பற்றுப் பிரதேசசபைத் தவிசாளர் யோ.ரஜனி, போரதீவுப் பற்றுப் பிரதேசசபை உபதவிசாளர் நா.தருமலிங்கம், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன், முன்னாள் மாகாணசபை உறுப்பினர் மா.நடராசா, இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் போரதீவுப் பற்றுக் கிளையின் தலைவர் இ.கந்தசாமி, ஜனநாயகப் போராளிகள் கட்சியின் மட்டக்களப்பு அம்பாறை மாவட்ட இணைப்பாளர் நா.நகுலேஸ் மற்றும் கட்சியின் பிரதிநிதிகள் எனப் பலர் கலந்து கொண்டனர்.

இதன் போது எதிர்வரும் 26ம் திகதி தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் நிகழ்வினை ஒழுங்கு செய்தல் தொடர்பிலான பல்வேறு விடயங்கள் கலந்துரையாடப்பட்டது. அதனைத் தொடர்ந்து நிகழ்வினை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் ஜனநாயகப் போராளிகள் கட்சி ஆகியன இணைந்து நடாத்துவதெனவும், கோவில்போரதீவு கண்ணகை அம்மன் ஆலயத்திற்கு முன்பாக மாலை 03.00 மணிக்கு நிகழ்வுகள் ஆரம்பிப்பதெனவும், இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் போரதீவுப் பற்றுக் கிளையின் தலைவர் இ.கந்தசாமி அவர்கள் தலைமையில் நிகழ்வு இடம்பெறுவதெனவும் தீர்மானிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.