இவ்வுலகினை வெற்றி கொள்ள வகுப்பறை கற்பித்தலில் ஆசிரியரின் வகிபங்கு

இவ்வுலகினை வெற்றி கொள்ள வகுப்பறை கற்பித்தலில் ஆசிரியரின் வகிபங்கு



அன்று முதல் இன்று வரை மாணவர்கள் மத்தியில் கல்வியை வழங்குபவர்களில் ஆசிரியரின் பங்கு மிக முக்கியமானது. “மாதா, பிதா, குரு, தெய்வம்” எனும் சான்றோர் வாக்கினிலும் ஆசிரியர் முக்கிய இடம்பெற்றுள்ளார். மாணவர்கள் தமது அறிவு, ஆற்றல், மனப்பாங்கு, திறன், விழுமியம் போன்றவற்றை வளர்த்துக் கொள்ளவும், சமூகத்தில் சிறந்து வாழ வழிவகுப்பதும் ஆசிரியரின் கடமையாகும் பாடசாலைச் சமூகத்திலே மாணவர்களுடைய திறன்கள், ஆளுமைகள் இனங்காணப்பட்டு அவர்களின் இலக்குகள் அடையப்பட ஆசிரியர் உதவி புரிகின்றார். இவ் ஆசிரியர்களை சிறப்பிக்கும் வகையிலே அக்டோபர் 6ம் திகதி உலக ஆசிரியர் தினம் கொண்டாடப்படுகிறது.

வகுப்பறை கற்பித்தலில் ஈடுபடும் ஆசிரியர்கள் அனைவரும் தங்களை ஒருநிலைப்படுத்திப கற்பித்தலில் ஈடுபடுத்த வேண்டும். மாணவர்கள் அனைவரும் ஒரே விதமான சிந்தனை சக்தியைக் கொண்டு இருக்க மாட்டார்கள். ஆனால் ஆசிரியர் ஒருவர் அவர்களின் சிந்தனை சச்தியை புரிந்து கொண்டு அதற்கு ஏற்றால் போல் கல்வியை வழங்குபவராக இருத்தல் வேண்டும். ஆசிரியர், மாணவர் எனும் இரண்டு எண்ணக்கருக்களும் பொதுமையாக்கப்படும் இடம் பாடசாலையாகும். பாடசாலையானது மாணவர்களின் வாழ்க்கையினை தீர்மானிக்கும் இடமாகவும், வாழ்க்கை பயணங்களை சிறப்பாக நகர்த்தி செல்லும் இடமாகவும் பாடசாலை விளங்குகின்றது.

தற்காலத்தில் கல்வியானது “அனைவருக்கும் கல்வி” என போதிக்கப்படுகிறது. குழந்தை பிறந்து தனது மூன்றாவது வயதிலே முன்பள்ளி கல்வியைத் தொடருகின்றது. இங்கு ஆசிரியர்கள் தங்களை பலவாறு பாவனை செய்து கொண்டு கற்பித்தலை வழங்க வேண்டும். ஏனெனில் கல்வியின் அடித்தளம் முன்பள்ளியாகும். ஆரம்பம் சிறப்பாக அமைந்தால் தான் முடிவும் சிறப்பாக அமையும் என்பதற்கமைய ஆரம்பக் கல்வியை சிறப்பாக வழங்குவதில் ஆசிரியரின் பங்கு இன்றியமையாதது. அதன் பின் தனது பாடசாலைக் கல்வியைத் தொடர தனது ஆறாவது வயதிலே பிள்ளை பாடசாலை செல்கின்றது. தனது பதினெட்டு வயது வரை கட்டாயக்கல்வியை பெற வேண்டுமென இலங்கை அரசாங்கம் கூறியுள்ளது. இந்த காலங்களில் கல்வியை முறையாக வழங்கும் பொறுப்பு ஆசிரியருக்கு உண்டு.

பாடசாலையில் ஆசிரியர் கற்பித்தலை வழங்க முன் தனக்கு கொடுக்கப்பட்ட வகுப்பறையை அவதானித்தல் வேண்டும். மாணர்களுக்கு ஏற்ற மாதிரி வகுப்பறையானது காற்றோட்டம் உள்ளதாக உள்ளதா, வளங்களானது அமையப் பெற்றுள்ளதா என ஆராய்ந்து மாணவர்களுக்கு கற்றலை ஏற்படுத்த வேண்டும் சிந்தனை விருத்தியை வலுப்படுத்துவது ஆசிரியரின் கடமையாகும். எட்பிங்கோஸ் எனும் அறிஞர் “மனிதனின் ஞாபகம்” பற்றி குறிப்பிட்டுள்ளார். இவர் கற்றல், நினைவிருத்தல் பற்றி குறிப்பிடுகையில், ஆசிரியர் கற்பித்த விடயங்களை மாணவர்கள் எவ்வளவு தூரம் வெளிக்காட்டுகின்றனரோ அதுவே ஆசிரியரின் வெற்றியாகும்.

ஆசிரியர்கள் மாணவர்களுக்கு கற்பிப்பதற்கு பல்வேறு கற்பித்தல் முறைகளை கையாண்டு வருகின்றனர். எப்போதும் மாணவர்களுக்கு ஒரே விதமான கற்பித்தலை வழங்குதல் சிறந்நதலாகாது மாணவர்கள் தங்களுடைய இலக்கினை அடைய ஆசிரியர்கள் வௌ;வேறு பாணிகளில் கற்பித்தலை வழங்க வேண்டும். மாணவர்களிடையே சிறந்த கற்பித்தலை வழங்கும் போது தான் அவர்களின் இலக்கானது சமூகத்தில் அடையப்படுகின்றது.





மாணவர்கள் அனைவரும் ஒரே விதமான கற்றல் பாணியை கொண்டிருக்க மாட்டார்கள். மாணவர்கள் மத்தியில் ஏழு விதமான கற்றல் பாணிகள் உள்ளதாகவும் அதற்கமைய ஒவ்வொரு மாணவர்களினதும் கற்றல் பாணிகளை அறிந்து கொண்டு ஆசிரியர் கற்பித்தல் வேண்டும். மாணவர்கள் மத்தியில் காணப்படும் ஏழு வகை கற்றல் பாணிகள் பின்வருமாறு

1. மொழி சார்ந்த கற்றல் (linguistic)

2. தர்க்க ரீதியான கற்றல் (logical)

3. படமாக கற்றல் (spatial)

4. இசையின் மூலம் கற்றல் (Rmusical)

5. இயங்கிக் கொண்டு கற்றல் (Bodily)

6. சமூகத்துடன் கற்றல் (Interpersonal)

7. தனிமையில் கற்றல் (Imterperonal) ஆகும்.


வகுப்பறையில் ஆசிரியர்கள் வெறுமனே கல்வியை போதிப்பவராக மட்டுமன்றி ஒழுக்கத்தையும் போதிப்பவராக இருத்தல் வேண்டும். கல்விக்கு மிக முக்கியம் ஒழுக்கம.; ஒழுக்கம் இல்லையேல் கற்ற கல்வியும் வெறுமையாகிடும். சமூகத்தில் மிளிர்வதற்கு கல்வி எவ்வளவு முக்கியமோ அந்த அளவிற்கு ஒழுக்கமும் மிக முக்கியம் ஆகும். ஆசிரியர்கள் வகுப்பறை கற்பித்தலில் ஈடுபடும் போது மாணவர்களுடன் அன்பாக பழக வேண்டும், மாணவர்களைப் பற்றி அறிந்திருத்தல் வேண்டும், நண்பராக இருத்தல் வேண்டும், சிறந்த வினாக்களை தொடுப்பவராககவும், வினாக்களுக்கு விடை அளிப்பவராகவும், திட்டமிடலை மேற்கொண்டு அறிவுரைகள் வழங்குபவராகவும், மாணவர்களின் இன்ப துன்பங்களில் ஆசிரியர் பங்கெடுப்பவராகவும் இருத்தல் வேண்டும்.

ஒழுக்கத்தை மாத்திரமின்றி சமூகப்பிரச்சனைகளையும் எடுத்துக்கூறி அதற்கமைய மாணவர்களை தன்வயப்படுத்தி உள்ளடங்கல் கற்பித்தலையும் வழங்க வேண்டும். இளம் சிறுவர்களிடம் அதிகரித்து வரும் போதைப்பொருள் பாவனை, வன்முறை போன்ற பலவற்றை எடுத்துக்கூறி கல்வி வழங்குபவராக ஆசிரியர் இருத்தல் வேண்டும்.

வகுப்பறைக் கற்பித்தலானது எதிர்காலத் தலைவர்களை உருவாக்கி கொண்டே வருகின்றன. கல்விமான்களும், புத்திஜீவிகளும், அறிவியலாளர்களும் என்று பெருகிக் கொண்டே வருகின்றனர். இன்றைய காலத்தில் அவர்களை சிறந்தவர்களாக உருவாக்கியது ஆசிரியர்கள் தான். கற்றல் தொடர்காக கோட்பாடுகளும் எழுந்துள்ளன. உதாரணமாக நு.டு தோண்டை என்பவரின் தூண்டல்- துலங்கல் கோட்பாடு, ஸ்கின்னரின் தொழில் நிபந்தனைக் கோட்பாடு, பவ்லோவின் பழைய நிபந்தனைக் கொள்கை போன்றவற்றையும் ஆசிரியர் கற்று வகுப்பறையில் பிரயோகிக்கும் போது சிறந்த மாணவ சமுதாயத்தை உருவாக்க கூடியதாகவுள்ளது. ஆசிரியர்கள் மாணவர்களையும், மாணவ சமுதாயத்தையும், ஏன் இவ் உலகினையும் உருவாக்கும் வல்லமை கொண்டவர்கள். ஆசிரியர்களின்றி கல்வி இடம்பெறாது. கல்வியின்றி மாணவர்கள் இவ்வுலகினை வெல்ல முடியாது. எனவே வகுப்பறை கற்பித்தலில் ஆசிரியரின் வகிபங்கு மிக மிக முக்கியமானது. நாம் இவ்வுலகினை வெற்றி கொள்ள ஆசிரியரின் சிறையில் அகப்படுவோம். அப்போது தான் கல்வி எனும் பாடம் புகட்டப்படும் இனிதே!

க. ரக் ஷனா
2ம் வருடம் சிறப்புக்கற்கை
கல்வி, பிள்ளை நலத்துறை
கிழக்குப் பல்கலைக்கழகம்