அவுஸ்திரேலிய சிட்னி முருகன் ஆலயத்தால் கிணறுகள்
(கதிரவன் )

அவுஸ்திரேலிய சிட்னி  முருகன் ஆலயம் திருகோணமலை வடக்கு எல்லைக் கிராமமான   திரியாயில் பொது மக்கள் நன்மை கருதி 3 கிணறுகளை அமைத்துக் கொடுத்துள்ளது. குடிநீர் தேவைக்கும். விவசாய தேவைக்கும் இவை பயன்படுத்தப்பட உள்ளது. ஒவ்வொரு கிணற்றையும் 5 தொடக்கம் 11 குடும்பங்கள் பயன் படுத்தக்கூடியதாக நிர்மாணிக்கப்பட்டுள்ளது.


திரியாய் கிராம முன்னேற்ற சங்கங்த்தின் ஊடாக இவை அமைக்கப்பட்டுள்ளது. இவற்றுக்கு புறம்பாக திரியாய் பிள்ளையார் ஆலய முன்றலில் 3 இலட்சம் பெறுமதியான நவீன மலசல கூட தொகுதியும் அமைக்கப்பட்டுள்ளது. வருடாந்தம் தொண்டமாறில் இருந்து கதிர்காமம் வரும் யாத்திரீகர்கள் இவ்வாலயத்தில் தங்கி செல்வதை வழக்கமாக கொண்டுள்ளர். இவர்கள் அவசர தேவைக்கு பெரிதும் கஸ்டப்படுவதை தெரிவித்ததைத் அடுத்து இது அமைத்துக் கொடுக்கப்பட்டுள்ளது.