ஓட்டமாவடி தேசிய பாடசாலையில் பாதசாாிகளுக்கு வீதி போக்குவரத்து விழிப்பூட்டல் கருத்தரங்கு





மு.கோகிலன்.

சரியான வழியில் செல்வோம்.வாகன விபத்துக்களை தடுப்போம் எமது
பாதகாப்பைப் பேனுவோம் 'என்ற தொனிப்பொருளில் இன்று ஓட்டமாவடி தேசிய பாடசாலையில் (மத்திய கல்லூரி)வீதி போக்குவரத்து தொடர்பான விழிப்புணர்வு கருத்தரங்கு மற்றும் வீதி நாடகமும் நடைபெற்றது.


இவ் விழிப்புணர்வு நிகழ்வினை வாழைச்சேனை பொலிசாரும் கொழும்பு வீதி போக்குவரத்து தலைமை பொலிஸ் பிரிவும் இணைந்து ஏற்பாடு செய்திருந்தது.இதற்க்கான அனுசரனையினை ;பெயார் பெஸ்ட்;' காப்புறுதி நிறுவனம் வழங்கியிருந்ததது. நிகழ்வில் வாழைச்சேனை பொலிஸ் பதில் பொறுப்பதிகாரி ஜ.பி.ஜெயவீர, கொழும்பு தலைமைச் செயலக போக்குவரத்து பிரிவு பொலிஸ் பரிசோதகர் எஸ்.ஜ.காரியவசம் மற்றும் கல்லூரி அதிபர். எம்.எல். ஹலிம் இஸ்ஹாக் மற்றும் பாடசாலை மாணவர்கள் ஆசிரியர்கள் ஆகியோர்கள் கலந்து கொண்டனர்.

இதன்போது வீதி போக்குவரத்தின் போது கைக்கொள்ள வேண்டிய பாதுகாப்பு தொடர்பாக விளக்கமளிக்கப்பட்டது. முறையற்ற வீதி போக்குவரத்து தொடர்பாகவும் எவ்வாறு பாதசாரிகள் மற்றும் வாகன ஓட்டுனர்கள் கடைப்பிடிக்க வேண்டிய வீதி போக்குவரத்து நடைமுறைகள் தொடர்பாக விழிப்பூட்டும் வீதி நாடகமும் பொலிசாரினால் நடாத்தி காண்பிக்கப்பட்டது.