தேசிய சோட்டோகான் சுற்றுத்தொடரில் ராம் கராத்தே சங்கம் மீண்டும் சாதனை


இலங்கை சோட்டோகான் கராத்தே சம்மேளனத்தின் தலைவர் சிஹான் லலித் நாணயக்கார தலைமையில் இடம்பெற்ற பத்தாவது தேசிய சோட்டோகான் கராத்தே சுற்றுப்போட்டியில் ராம் கராத்தே சங்கத்தின் இலங்கைக்கான பிரதம போதனாசிரியர் சிஹான் கே.ஹேந்திரமூர்த்தியின் தலைமையில் பங்கேற்ற மாணவர்கள் பெருமளவில் பதக்கங்களை வென்று தேசிய மட்டத்தில் தமது திறமைகளை மீண்டும் நிரூபித்து தாம் சார்ந்த கிழக்கு மாகாணத்துக்கும் ராம் கராத்தே சங்கத்துக்கும் பெருமை சேர்த்துள்ளனர்.

கடந்த சனியன்று (12) கொழும்பு சுகததாஸ உள்ளக அரங்கில் இடம்பெற்ற குறித்த சுற்றுப்போட்டியில் 9 தங்கப் பதக்கங்கள், 4 வெள்ளிப் பதக்கங்கள் மற்றும் 4 வெண்கலப் பதக்கங்கள் அடங்கலாக 17 பதக்கங்களை வெற்றிகொண்டு இச்சாதனையை நிலைநாட்டியுள்ளார்கள்.

ராம் கராத்தே சங்கத்தின் உதவிப் போதனாசிரியர்களான சென்சி கே.இராஜேந்திர பிரசாத் மற்றும் சென்சி கே.சாரங்கன் ஆகியோரின் நேரடிப் பயிற்றுவிப்பின் கீழ் குறித்த சுற்றுப்போட்டியில் பங்குபற்றிய வீர வீராங்கனைகள் வெற்றிகொண்ட பதக்கங்களின் பட்டியல் பின்வருமாறு அமைந்திருந்தது.

தங்கப் பதக்கங்கள்
1.       ரி.யஜஸ்ரன் – 16/17 வயதுக்குட்பட்டோருக்கான காட்டா போட்டி.
2.       பி.மதன்ராஜ் - 16/17 வயதுக்குட்பட்டோருக்கான குமிற்றி போட்டி.
3.       வி.தனரிக்கா - 16/17 வயதுக்குட்பட்டோருக்கான காட்டா போட்டி.
4.       எஸ்.ரிசோபன் - 20 வயதுக்குட்பட்டோருக்கான குமிற்றி போட்டி.
5.      எஸ்.சராஜ் மொஹமட் - 20 வயதுக்குட்பட்டோருக்கான குமிற்றி போட்டி.
6.       பி.சரோன் சச்சின் - 20 வயதுக்குட்பட்டோருக்கான காட்டா போட்டி.
7.      20 வயதுக்குட்பட்டோருக்கான குழு காட்டா போட்டியில் தங்கப் பதக்கம்.
a.       பி.சரோன் சச்சின்.
b.      எஸ்.ரிசோபன்.
c.       எஸ்.சராஜ் மொஹமட்.

வெள்ளிப் பதக்கங்கள்
1.       எஸ்.நவக்சன் - 13 வயதுக்குட்பட்டோருக்கான காட்டா போட்டி.
2.       ஆர்.றிமாஸ் - 14/15 வயதுக்குட்பட்டோருக்கான குமிற்றி போட்டி.
3.       பி.மதன்ராஜ் - 16/17 வயதுக்குட்பட்டோருக்கான காட்டா போட்டி.
4.       எஸ்.சராஜ் மொஹமட் - 20 வயதுக்குட்பட்டோருக்கான காட்டா போட்டி.


வெண்கலப் பதக்கங்கள்
1.       எஸ்.நவக்சன் - 13 வயதுக்குட்பட்டோருக்கான குமிற்றி போட்டி.
2.       எஸ்.கிதுர்ஜன் - 14/15 வயதுக்குட்பட்டோருக்கான குமிற்றி போட்டி.
3.       ஆர்.றிமாஸ் - 14/15 வயதுக்குட்பட்டோருக்கான காட்டா போட்டி.
4.       எஸ்.ரிசோபன் - 20 வயதுக்குட்பட்டோருக்கான காட்டா போட்டி.

கிழக்கு மாகாணத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி, வரையறுக்கப்பட்ட 9 வீர வீராங்கனைகளோடு மட்டும் இச்சுற்றுப்போட்டியில் பங்குபற்றிய ராம் கராத்தே சங்கத்தின் போட்டியாளர் எஸ்.சராஜ் மொஹமட் இத்தொடரின் 20 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கிடையிலான சிறந்த வீரர் (Best Player) என்ற விருது வழங்கிக் கௌரவிக்கப்பட்டமை இங்கே விசேட அம்சமாகும்.