கிழக்கு மாகாண உள்ளூராட்சி மன்றங்களின் அபிவிருத்தி தொடர்பான உயர்மட்ட கலந்துரையாடல்



(அகமட் எஸ். முகைடீன்) 

கிழக்கு மாகாண உள்ளூராட்சி மன்றங்களின் அபிவிருத்தி தொடர்பான உயர்மட்ட கலந்துரையாடல் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதித் தலைவரும் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி இராஜாங்க அமைச்சருமான சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் தலைமையில் நேற்று (8) செவ்வாய்க்கிழமை அமைச்சு அலுவலகத்தில் நடைபெற்றது.
இவ்வுயர்மட்ட கலந்துரையாடலில் ஆசிய அபிவிருத்தி வங்கியின் உப நகரங்கள் திட்டத்தின் ஆலோசகர் செட்டி, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி இராஜாங்க அமைச்சின் செயலாளர் எஸ்.பி.ஏ.பி. பொறலஸ், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி இராஜாங்க அமைச்சின் கருத்திட்டங்களுக்கான மேலதிகச் செயலாளர் எம்.எம். நயிமுடீன், இலங்கை நிர்வாக சேவையில் ஓய்வு பெற்ற உத்தியோகத்தரும் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி இராஜாங்க அமைச்சரின் பிரத்தியேக செயலாளருமான அப்துல் மஜீட், கிழக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் என். மணிவண்ணன், கல்முனை மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம். றகீப், கல்முனை மாநகர ஆணையாளர் எம்.சி. அன்சார் ஆகியோர் கலந்துகொண்டனர்.

இதன்போது உள்ளூராட்சி மன்றங்களுடைய அபிவிருத்தி மற்றும் உள்ளூராட்சி மன்றங்களின் ஆளுகை பிரதேசங்களின் அபிவிருத்தி நடவடிக்கைகளுக்காக உள்ளூராட்சி மன்றங்களுக்கு நிதி உதவி வழங்குதல் போன்றன தொடர்பில் விரிவாக கலந்துரையாடப்பட்டது.