கல்வியில் நான் விரும்பும் மாற்றம்




கல்வி என்பது அழியாத செல்வம்  கல்வி கற்பதன் மூலம் நாம் புது புது விஞ்ஞான செய்திகளை அறிந்து கொள்ள முடிகின்றது. பல பல பட்டம்  பெறுவது மட்டும் கல்விபயன்பட போவதில்லை நம் அறிவை பெருக்குவதற்கும் அவர்களின் வாழ்கை நிலையையும் உயர்துவதோடு,பொருளாதார நிலைமையும் உயர்த்துகின்றது. இதன்படி தற்கால கல்வி முறையில் நான் விரும்பும் மாற்றங்களில் சில.

பாடசாலை கல்வியானது நோயாளிகளை வலுகட்டாயமாய் வெளியேற்றி விட்டு ஆரோக்கியமானவர்களை மட்டுமேவைத்து கொள்ளும ; மருத்துவமனைகளை போன்றது. பாடசாலைகள் படிக்க இயலாதவனை படிக்க வைக்கத்தான் பாடசாலைகள்  என நினைத்தோம். ஆனால் நன்கு படிக்கும் மாணவனை மறைமுகமாய் கழுவேற்றி; நகலடும் எந்திரமாய் அவனை மாற்றி வென்றெடுத்தோம் முதலிடத்தை என செய்தித்தாளில் மார்தட்டிபணம் குவிக்கும் மதுகடைகளாய் பள்ளிக்கூடங்கள் மாறிப்போனது இந்நிலையை மாற்றி அமைக்க வேண்டும். அனைவருக்கும் கல்வி என்று நேரு,காந்தி போன்ற தலைவர்கள் கல்வியை கட்டாயமாக்குவதற்கு பல போராட்டங்களை செய்தது போன்று கல்வியில் கீழ் தங்கியவர்களை ஊக்குவிக்கும் நிறுவனங்கள் மற்றும ; புகழ் பெற்ற தலைவர் மூலம் மாற்றத்தை கொண்டு வரவேண்டும்

மேலும் பாடசாலை படிப்பு என்பது முந்தைய காலங்களில் ஏழைகளால் நினைக்க முடியாத ஒன்றாக இருந்தது. இப்போது பட்டபடிப்பு கூட சாதாரமான ஒன்றாகமாறிவிட்டது இலங்கை,முதுகளை போன்ற படிப்புப்கள் படிப்பதற்கு அரசு ஊக்குவிக்கிறது இது போல் பெண்கல்வியையும் ஊக்குவிக்கின்றது. அரசுகல்லூரிகளில் படிக்கும் கல்வி தரமான கல்வியே இதை நன்கு அறிந்து கொள்ளாமல் தனியார் கல்லூரிகளில் சேர்துவிடுகின்றனர் இந்த அறியாமையை மாற்றியமைக்க வேண்டும்.

மேலும் பாடசாலையில் தற்போது ஆசிரியர் மையக்கல்வி மாணவர் மையக்கல்வியாக மாற்றிய அமைக்க வேண்டும். மாணவர்களின் சுய செயற்பாடுகளுக்கு அதிகநேரம் ஒதுக்கி கொடுப்பதோடு வெறும் ஊக்குவிப் பாளரும், வழிகாட்டியாகவுமே ஆசியர்கள் திகழ வேண்டும் இதன் மூலம் ஒரு திறமையான பட்டதாரியை உருவாக்க முடியும். அத்தோடு தற்காலத்தில் நடாத்தப்படும் பரீட்சை முறையிலும் மாற்றத்தை கொண்டுவர வேண்டும் மூன்று தவணைகளையும் எழுத்துமுறை பரீட்சை இல்லாது ஒரு பரீட்சை மட்டும் பாடத்திட்டத்தை அடிப்படையாக கொண்ட எழுத்து முறை பரீட்சையையும் மிகுதி இரண்டு முறையும் செய்முறையுடன் தொடர்பான பரீட்சைகளாளகவும் மாற்றி அமைக்க வேண்டும்.

 அத்தோடு நம்அரசு நம்நாட்டு கல்விதரத்தை உயர்த்துவதற்கு பல நல்ல திட்டங்களையும் உதவிகளையும் செய்துவந்தாலும் அவை உரியநேரத்தில் மாணவர்களுக்கு சேரவும்,உணவு, உடையும், தங்கும் வசதியும் தரமானதாகவும் மற்ற அரசியல் வல்லுநர்களால் சிதையாமல் முழுமையாக வந்து சேருமாறு கவனிக்க வேண்டும். கல்வி மட்டும் அல்லாது விளையாட்டு துறையிலும்போதிய விளையாட்டு உபகரணங்களும் பாடசாலைகளில் இல்லை கிராமப்புற பாடசாலைகளில் இருந்து மாணவர்களை முன்னேற்ற உதவும் வகையில் இருக்க வேண்டும்.

 மேலும் ஒரு மாற்றமாக ஒற்றை துண்டுடன் ஒழுக்கமே முதலாய் கைகட்டி கண்ணியமாய் நடத்த குருகுலம்(ஒழுக்கம்) அன்று கல்வியில் இருந்து அன்னியர் தலையீட்டால் அனைத்தும் ஆங்கிலமயமாய் தொழில்நுட்ப அறிமுகத்தால் இன்று கற்பவை எல்லாம் கணிணிமயமாய் ஆனது. நாகரீக குறுக்கீட்டால் க்ளோனிங் டிசைனிங் என பட்டியல் நீண்டாலும் இன்றைய போட்டி உலகில் கல்வி மூளையை அடகுவைத்து முதுகுக்கு பின்னால் விலை பேசும் தரகுவியாபாரமாய் ஆனது.

காலம்  மாறும் கவிநயம் மாறும்  மாறுதல் என்றும் மாறாது இருக்க மாற்றங்கள் உண்டு இன்றும்  உலகில் நம்கல்வி முறையில் மாற்றம் வேண்டும் நமது கல்வி நாளைய தலைமுறைக்கு வரலாற்று பாடங்கள்  மட்டும் இல்லாமல் சரித்த பாடமாக இருக்க வேண்டும். புதுப்புது படைப்புக்கள் தினந்தினம் இங்கு இருக்கிறது. புத்தகங்களை நிரப்புவது வாடிக்கை என்றானது இவ் உலகில் மாற்றியமைக்க வேண்டுவது புத்தகத்தை மட்டும் அல்ல மாறாக கல்வி முறையையும்தான்.

மேலும் மாணவர்கள் படிக்கநினைத்த இலட்சியங்களை நிறைவேற்ற அரசும், பெற்றோரும் ஊக்கிவிக்க வேண்டும்.அதற்கு ஏற்றவாறு பாடத ;திட்டங்கள் அமைவதோடு ஒவ்வொரு மாணவர்களினதும்  இலட்சியகனவை நிறைவேற்றி வைக்கும் அளவுக்கு பெற்றோர்களை மாற்றி அமைக்க வேண்டும்  கருத்தரங்குகள் மூலம் இதனால் இலங்கை நாடு அபிவிருத்தி அடைந்த நாடாக மாறுவதற்கு இது உதவியாக மட்டும் அல்லாமல் இலங்கையின் ஒரு மிகப்பெரிய மாற்றம் ஆகக்கூட இருக்கும்

மேலும் தற்போது ஆசியர்கள் மாணவர்களுக்கு கற்பித்தல் ;முறையாக கரும்பலகையில் எழுதிய பாடத்துக்கு விளக்கம் கொடுக்கின்றனர். இம்முறையை மாற்றி அமைக்க வேண்டும். இயந்திரமயமாகி உள்ள இவ் உலகில் அதற்கேற்றவாறு பாடங்கள் நடாத்தப்பட வேண்டும். திரையில் காட்சிப்படுத்தல்,புகைப்படங்கள் மூலம் விளக்கம் கொடுத்தல் இவ்வாறான முறையில் பாடங்கள் கற்பிக்கப்படுவதன் மூலம் சிறந்த ஒரு தலைமுறையை உருவாக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும்.

அத்தோடு பாடசாலைக்கு முன்னால் இரவும் பகலுமாய் காத்திருக்கின்றனர். நம் பெற்றோர்கள் ஏன்எனில் அரசு பாடசாலைகள் தரம் இல்லா பாடசாலை, தரம் இல்லா கட்டிடம், போதிய வளம் இல்லா பாடசாலை, போதிய அளவு ஆசிர்யர்கள் இல்லா பாடசாலை என்று பாடசாலைகள் தரம் பிரிக்கப்பட்டு இருப்பதால் ஏழைகளின் படிப்பு கேள்விக் குறியாகின்ற நிலை உருவாகின்றது. இந்நிலை தற்போது ஆயிரம் பாடசாலை திட்டத்தின் கீழ் பெரிதும் தற்போது பாதிக்கப்படுகின்றது. நிலைமை மாற்றி அமைக்க வேண்டும். அனைத்து பாடசாலைகளையும் அரசு சமமான முறையில் கவனிப்பதோடு அதற்கேற்றவாறு வளங்களும்  பகிரப்பட வேண்டும்.

 கல்வி தரத்தில் நம் நாடு தங்க தமிழகமாக திகழ வேண்டும். எத்துறைசார் பட்டபடிப்புகளாக இருத்த போதும் மாணவர்கள் முன்னேற ஊக்குவிப்பும், உதவிகளும்  செய்து தர வேண்டும் நம்நாட்டில் பெற்ற கல்வியை இங்கேயே பணியாற்றும் சூழ்நிலை வர வேண்டும். வெளிநாட்டவர் கல்வி கற்க நம் நாட்டிற்கு வரும் வகையில் நம் கல்வி தரம் உயர வேண்டும். மற்ற நாடுகள் நம் நாட்டை திரும்பிபார்கும் வகையில் நம் நாட்டு மாணவர்களின் கல்வி திறமை வெளிப்பட அரசு நடவடிக்கை எடுத்து கல்வி நிலையை கண்காணிக்க வேண்டும் கல்வி கண் திறந்த நாடே மற்றநாடுகளை காட்டிலும்  தலை சிறந்த நாடாகவும் கல்வி வளம் நிறைந்த நாடாகவும் இருக்க வேண்டும் .

 இதன்படி முடிவாக கூறின் நம் கல்வியில் தொழில்நுட்ப ரீதியாகவும், விஞ்ஞான ரீதியாகவும் சில மாற்றங்கள் வேண்டும். மதிப்பெண் மட்டும் வாழ்கை இல்லை மாணவர்களின் வசந்தகாலத்தை இலையுதிர் இறந்தகாலமாய் ஆக்கி விடாதிர்கள் விரும்பிய பாடம் படிக்கட்டும் விருப்பப்படி படிக்கட்டும் என பெற்றோர்  முடிவெடுக்கும்  உரிமையை கொடுத்து விடுங்கள் ஆசிரியரிகள் மற்றும் பெற்றோர்கள் மாணவர்களுக்கு வெறும்  வழிகாட்டியாகவும் உதவியாளராகவும் மட்டுமே திகழூங்கள் படித்தவர் எல்லாமனு; வாழ்கையில் வெற்றி பெற்றவர் இல்லை. வாழ்கையில் வெற்றி பெற்றவர் பலபேர் நன்கு படித்தவர் இல்லை படிப்பு என்பது ஒரு திறவுகோள் மட்டுமே.

எனவே காலம் மாறும் கவிநயம் மாறும் மாறுதல் என்றும்  மாறாது இருக்க மாற்றங்கள் உண்டு இன்று உலகில் நம் கல்வி முறையில் மாற்றம் வேண்டும்! நம் கல்வி நாளைய தலைமுறைக்கு வரலாற்று பாடமாக மட்டும் இல்லாமல் சரித்திர பாடமாகவும் இருக்க.

இபுன் சஹீத ; நுஜைலா,
கல்வியியல் சிறப்புக்கற்கை,
2ஆம் வருடம், 1ஆம ; அரையாண்டு,
கிழக்குப் பழ்கலைக்கழகம்,
வுந்தாறுமூலை,