மட்டக்களப்பு புனித மிக்கேல் கல்லூரியில் போதைப்பொருள் ஒழிப்பு தொடர்பான நிகழ்வு



ஜனதிபதியின் பணிப்புரைக்கு அமைவாக தேசிய போதைப்பொருள் தடுப்பு பாடசாலை வாரமாக ஜனவரி 21 தொடக்கம் 25 வரை பிரகடனப்படுத்தப்பட்டு போதைப்பொருள் ஒழிப்பு தேசிய வேலைத்திட்டம் நாடளாவிய ரீதியில் பாடசாலை மட்டத்தில் விழிப்புணர்வு செயல்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படுகின்றது .

இதற்கு அமைவாக மட்டக்களப்பு மாவட்டத்தில் போதைப்பொருள் ஒழிப்பு செயல்திட்டங்கள் பாடசாலை மட்டத்தில் நடைமுறைபடுத்தபட்டுள்ளது.

மட்டக்களப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட மட்டக்களப்பு புனித மிக்கேல் கல்லூரியில் போதைப்பொருள் ஒழிப்பு தொடர்பான நிகழ்வு மட்டக்களப்பு பொலிஸ் நிலைய உத்தியோகத்தர்களினால் இன்று முன்னெடுக்கப்பட்டன .

கல்லூரி அதிபர் பயஸ் ஆனந்தராஜ் தலைமையில் மட்டக்களப்பு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தீகா வதுற ஒழுங்கமைப்பில் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்வு நடைபெற்றது ,

இதன் போது போதைப்பொருள் ஒழிப்பு தொடர்பாக விழிப்புணர்வை ஏற்படுத்தும் கருத்துரைகளும் அது தொடர்பான காட்சிகளும் மாணவர்களுக்கு காட்சி படுத்தப்பட்டன .

இந்நிகழ்வில் மட்டக்களப்பு பிராந்திய பொலிஸ் அத்தியட்சகர் எல் ஆர் .குமாரசிறி ,போக்குவரத்து பொலிஸ் பிரிவு பொறுப்பதிகாரி ராஜபச கல்லூரி ஆசிரியர்கள் மாணவர்கள் ,கலந்துகொண்டனர்