சுவாமி விபுலானந்தா அழகியற் கற்கைகள் நிறுவகத்தில் முதன் முறையாக காண்பியக்கலை காட்சிப்படுத்தல் நிகழ்வு




சுவாமி விபுலானந்தா  அழகியற் கற்கைகள் நிறுவகத்தின் கட்புல மற்றும் தொழில்நுட்பக் கலைத்துறை இறுதியாண்டு மாணவர்களின் காண்பியக்கலை காட்சிப்படுத்தல்  2019 கலை வெளிப்பாடுகள் நடைபெறுகின்றது

05.02.2019 தொடக்கம் 08.02.2019 வரை நான்கு நாட்கள் காலை 9.00 மணி முதல் மாலை 8.30 மணி வரை இடம்பெறவுள்ள காண்பியக்கலை காட்சிப்படுத்தலை பார்வையாளர்கள் சுவாமி விபுலானந்த அழகியற் கற்கைகள் நிறுவகத்தின் வளாகத்திலும், நிறுவகத்தின் கலைக்கூடங்களிலும் இலவசமாக கண்டுகளிக்கலாம்.

சுவாமி விபுலானந்தா அழகியற் கற்கைகள் நிறுவகத்தில் முதன் முறையாக இடம் பெறவுள்ள இந்த காண்பியக்கலை கண்காட்சியானது பல்வேறு பரிசோதனைகளின் விளைவால் மாணவர்களினால் உருவாக்கபப்ட்ட வரைதல், பல்லூடகக்கலை, ஸ்தாபனக்கலை, சிற்பம் மற்றும் டிஜிடல் கலை போன்ற வெவ்வேறு காணப்பிய வெளிப்பாட்டு முறைமைகளுக்கூடான வெளிப்பாடுகளை காட்சிப்படுத்துவதாக அமைந்துள்ளது.

இக் கலை வெளிப்பாடுகளில் உள்ளூர் கலை மரபுகள், கைவினைப் பண்புகள் மற்றும் பண்பாட்டு அடையாளங்கள் போன்ற உள்ளூர் அறிவுசாரந்த விடயங்களும் மற்றும் மாணவர்களினது சுயம் சார்ந்த விசாரணைகளுக்கூடான விடயங்களும் உள்வாங்கப்பட்டுள்ளன.

இக் காட்சிப்படுத்தலானது இந்நிறுவக மாணவர்களுக்கும் ஏனைய மாணவர்களுக்கும் முன்மாதிரியாக அமைவதுடன், மாணவர்களையும் சமூகத்தையும் கலைப்படைப்பினூடாக ஒன்றிணைப்பதாகவும்;;, எமது சமூகத்திற்கு சமகால காண்பியக்கலை தொடர்பான அறிவினை வழங்குவதாகவும் மாணவர்கள் தொடர்ந்து கலைவேலைப்பாடுகளை மேற்கொள்வதற்கும் தங்களை கலைஞர்களாக முதன்னிலைப்படுத்துவதற்கும் ஏனைய கலைச்சமூகத்திற்குள் தங்களது கலைவெளிப்பாடுகளை காட்சிப்படுத்துவதற்கும் ஒரு அடிப்படையினை வழங்குவதாகவும் அமையப்பெறுகின்றது.