கல்முனை பற்றிமா கல்லூரியின் இல்ல மெய்வல்லுநர் நிகழ்வுகல்முனை கார்மேல் பற்றிமா கல்லூரியின் வருடாந்த இல்ல மெய்வல்லுநர் போட்டி நிகழ்வின் பிரதம அதிதியாக கல்வி இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் கலந்து சிறப்பித்துள்ளார்.


குறித்த நிகழ்வு கல்லூரியின் முதல்வர் அருட்சகோதரர் செபமாலை சந்தியாகு தலைமையில் இன்று நடைபெற்றுள்ளது.

இதன்போது மழை காரணமாக மெய்வல்லுநர் நிகழ்வுகள் தடைப்பட்டிருந்த போதும் உள்ளக அரங்கில் மாணவர்களின் உடற்பயிற்சி நிகழ்வுகள்,கராத்தே நிகழ்வுகள் என்பன இடம்பெற்றுள்ளன.

குறித்த நிகழ்விற்கு   நாடாளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன் , அதிதிகளாக வலயக்கல்வி பணிப்பாளர்  ஜனாப் எம்.எஸ்.அப்துல் ஜலீல்   , அம்பாறை  திட்டமிடல் பணிப்பாளர் கே.பாக்கியராஜ்     ,  கல்முனை வடக்கு பிரதேச செயலாளர்ரீ.ஜே.அதிசயராஜ்  , கல்வி பணிப்பாளர்களும் ,கோட்டக்கல்வி பணிப்பாளர்கள் மற்றும் கல்லூரியின் ஆசிரியர்கள், மாணவர்கள்,பெற்றோர்கள், பொதுமக்கள் பழைய மாணவர்கள்,நலன் விரும்பிகள் என பலரும் கலந்து சிறப்பித்துள்ளனர்.