மட்டக்களப்பு முச்சக்கர வண்டி சாரதிகள் ஆர்ப்பாட்டம்



( சரவணன்)

மட்டக்களப்பு முச்சக்கர வண்டி சாரதிகள் நலன்புரிச் சங்கத்திற்கு எதிராக மட்டக்களப்பு மாநகர மேயர் செயற்படுவதை கண்டித்து முச்சக்கர வண்டி சாரதிகள் நலன்புரிச் சங்கத்திலுள்ள முச்சக்கர வண்டி சாரதிகள் (20.02.2019 புதன்கிழமை) காந்தி பூங்காவிற்கு முன்னால் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டமொன்றில் ஈடுபட்டனர்.

மட்டக்களப்பு முச்சக்கர வண்டி சாரதிகள் நலன்புரிச் சங்கத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்த ஆர்பாட்டத்தில் நூற்றுன்னணக்காக முச்சக்கரவண்டி சாரதிகள் கலந்துகொண்டு ,மாநகர சபை ஆணையாளரினால் வழங்கப்பட்ட தரிப்பிட அனுமதியை மீளப் பெறல் வேண்டும், முச்சக்கர வண்டி தரிப்பிடங்களில் எந்த நடவடிக்கை எடுப்பதாக இருந்தாலும் சங்க நிருவாகத்துடன் கலந்தாலோசனை செய்ய வேண்டும்;,

முச்சக்கர வண்டிகளின் சாரதிகளுக்கு ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்களை முன் வைக்க கூடாது. முச்சக்கர வண்டிகளின் நாளாந்த வரி பேசித்தீர்க்கப்படல் வேண்டும். சங்கத்தின் அனுசரணையுடன் பதிவுகள் மேற் கொள்ளப்படல் வேண்டும் என்பன போன்ற கோரிக்கைகளை முன்வைத்து சர்வாதிகாரி முதல்வர் ஒழிக, உங்கள் எண்ணத்தை எங்கள் மீது திணிக்காதே, போன்ற சுலோகங்கள் ஏந்தியவாறு கோஷங்கள் எழுப்பியவாறு மேயரின் பொம்மை ஏந்தியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த நிலையில் அங்கு சென்ற மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன் மற்றும் மட்டக்களப்பு மாநகர சபையின் சில உறுப்பினர்கள் சமூகமளித்து இவர்களின் கோரிக்கைகள் தொடர்;பாக கேட்டறிந்து கொண்டனர்.

இதனைத் தொடர்ந்து மச்சக்கரவண்டி சாரதிகள் அங்கிருந்து ஆர்ப்பாட்டமாக பிரதானவீதிவழியாக பஸ் நிலையம்;வரை சென்று அங்கிருந்து கோவிந்தன் வீதியிலுள்ள மனித உரிமை ஆணைக்குழுவின் காரியாலயம் வரை சென்று அங்கு மகஜர் ஒன்றை கையளித்து அதில் இருந்து ஆனப்பந்தி கோவில் சந்திக்கு சென்று வைத்தியசாலைவீதி ஊடாக மண்முணை வடக்கு பிரதேச செயலகம் வரைசென்று. அங்கிருந்து அரசாங்ககாரியாலயம்வரை சென்று அரசாங்க அதிபரிடம் மகஜரை கையளித்து பின்னர் மட்டக்களப்பு முச்சக்கர வண்டி சாரதிகள் நலன்;புரிச்சங்கத்தின் தலைவர் எஸ்.ஜேசுதாசன் கருத்து தெரிவிக்கையில் எமது சங்கமானது 1990ம் ஆண்டு ஆரம்பிக்கபட்டு ,ன்று வரை ஒரு தனியான கட்டமைப்பாக ஒழுக்கமான கட்டமைப்பாக இதுவரை இயங்கி வருகின்றது.

இந்தக் கட்டமைப்பை மட்டக்களப்பு மாநகர இன்;றைய மேயர் சீர் குலைக்க முற்படுகின்றனார். மட்டக்களப்பு மாநகர ஆணையாளரையும் இழுத்துக் கொண்டு எங்களை சீர் குலைக்க முற்படுகின்றார். அவரின் இந்த நடவடிக்கையை நாங்கள் வண்மையாக கண்டிக்கின்றோம்.

அதேவேளை சங்கத்தின் கட்டமைப்பில் 53 தரிப்பிடங்களை உருவாக்கி நாங்கள் 734 முச்சக்கர வண்டி சாரதிகளுக்கு தொழில் வாய்ப்பளித்திருக்கின்றோம். இது கால வரை நாங்கள் பட்ட துன்பங்கள் எங்களுக்கு மட்டும் தான் தெரியும். இந்த சங்கத்தை சீர் குலைத்து அவர்கள் இதனை கையகப்படுத்த முற்படுகின்றனர்.

எமது சங்கத்தின் கோரிக்கைகளடங்கிய மகஜர்களை கிழக்கு மாகாண ஆளுநர் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர், கிழக்கு மாகாண வீதி போக்கு வரத்து அதிகார சபை, மனித உரிமைகள் ஆணைக்குழு ஆகிய ஆகியோருக்கு வழங்கவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
முக்கிய செய்திகளை உடனுக்குடன் WhatsApp இல்  தெரிந்துகொள்ள 
  0771660248 இந்த இலக்கத்தை உங்கள் தொலைபேசியில் Battinews என Save பண்ணுங்கள் 
 உங்கள் WhatsApp இருந்து JOIN என மேலே குறிப்பிட்ட எமது இலக்கத்துக்கு ஒரு மெசேஜ் அனுப்புங்கள்