களுதாவளையில் இடம்பெற்ற பட்டிருப்பு கல்வி வலயத்திற்கான ஆங்கில நாடக விழா




ரவிப்ரியா

களுதாவளை மகா வித்தியாலயத்தில் பட்டிருப்பு வலய ஆங்கில அலகின் ஏற்பாட்டில் பிராந்திய ஆங்கிலஆதரவு நிலையத்துடன் இணைந்து நடாத்திய முதலாவது ஆங்கில நாடக விழாவின்போது. அதிதிகள் சம்பிரதாயபூர்வமாக வரவேற்கப்பட்டனர்.

பிராந்திய ஆங்கில ஆதரவு நிலையத்தின் பங்களிப்புடன் பட்டிருப்பு வலய ஆங்கில அலகு நடாத்தும்ஆங்கில நாடகவிழா 17ந் திகதி ஞாயிறு களுதாவளை தேசிய பாடசாலை மண்டபத்தில் அமைப்புக்குழுவின் தலைவர் வி.அந்தனி தலைமையில் நடைபெற்றது. காலை அமர்விற்கு பிரதம விருந்தினராக கிழக்கு மாகாண ஆங்கில உதவிக் கல்விப் பணிப்பாளர் திருமதி; ஜே.ஏ.ஐ ஜெயலத் கலந்து கொண்டார்.;

கௌரவ அதிதிகளாக கோட்ட கல்வி அதிகாரி .அருள்ராஜ் உதவிக் கல்விப் பணிப்பாளர் கே.சுந்தரலிங்;கம்கல்வியற்கல்லூரி விரிவரையாளர் என்.பிரசாந்தன் ஆகியோர் கலந்து கொண்டனர். விசேட அதிதிகளாகபங்குபற்றும் பாடசாலைகளின் அதிபர்களும் பட்டிருப்பு வலய ஆங்கில ஆசிரியர்களும் கலந்துகொண்டனர்.

காலை 09.30 மணிக்கு ஆரம்பமான முதல் அமர்வில் செட்டிபாளையம் மகாவித்தியாலயம் களுதாவளைதேசிய பாடசாலை பட்டிருப்பு தேசிய பாடசாலை, ஓந்தாச்சிமடம் விநாயகர் மகா வித்தியாலயம்தேற்றாத்தீவு மகாவித்தியாலயம் ஆகிய பாடசாலைகளின் நாடகங்கள் அரங்கேற்றப்பட்டன.

பிற்பகல் 2.00 மணிக்கு ஆரம்பமாகிய இரண்டாவது அமர்வில் தேற்றாத்தீவு சிவகலை வித்தியாலயம்பெரியகல்லாறு மகாவித்தியாலயம், கோட்டைக்கல்லாறு மகாவித்தியாலயம், களுவாஞ்சிக்குடி விநாயகர்வித்தியாலயம் களுவாஞ்சிக்குடி சரஸ்வதி வித்தியாலயம் ஆகிய பாடசாலைகளின் நாடகங்கள் அரங்கேறின.

அமைப்புக் குழுவைச் சேர்ந்த ஆங்கில ஆசிரியர்களான கே.ரூபன் (செயலாளர்) ரி.விஜயபாஸ்கர்(பொருளாளர்) ஆகியோர் அமைப்புக்குழுவடன் இணைந்து இதற்கான ஏற்பாடுகளைச் சிறக்காகச்செய்திருந்தனர்.

ஆங்கில ஆர்வலர் ஆசிரியை திருமதி செல்வராணி மற்றும் பிராந்திய ஆங்கில ஆதரவு நிலையத்தின்தலைவர் வி.அந்தனி ஆகியோர் பொன்னாடை போர்த்திக் கௌரவிக்கப்பட்டனா.; பிரதம அதிதியும் கிழக்குமாகாண ஆங்கில உதவி கல்விப் பணிப்பாளருமான திருமதி ஜே.ஏ.ஐ ஜயலத் மற்றும் அதிதிகள்மாணவர்களுக்கான சான்றிதழ்களை மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கி வைத்தனர்.

ஆங்கில நாடகங்களாக இருந்த போதும் மாணவர்கள் சிறந்த முறையில் நாடகத்திற்குரிய தங்கள் கதாபாத்திரங்களுக்கான முகபாவத்தையும் வெளிக்காட்டி எவ்வித உரையாடல் தடங்கலுமின்றி நாடகங்களை அரங்கேற்றியமை விசேட அம்சமாகும்.

மாணவர்களின் நடிப்பு திறமையும் ஆங்கில மொழியாற்றலும் மேலான வகையில் இருந்தது. மேடை அமைப்பிலும் விசேட கவனம் செலுத்தப்பட்டிருந்தமை பாராட்டுக்குரியது. எனினும் ஒலியமைப்பு மாணவர்களின் குரலை முழுமையாக உள்வாங்காதது ஒரு குறையாகக் காணப்பட்டது.

கலைத் திறமையை வெளிக்காட்ட மொழி தடை இல்லை என்பதை மாணவர்கள் இயல்பாக இனம்காட்டுவதற்கான ஒரு முன் முயற்சியாக இதை கணிக்கலாம்.

பிராந்திய அமைப்புக்குழு தலைவர் தனதுரையில் தாங்கள் ஏற்கனவே 2 இடங்களில் இந்த நாடக விழாவை நடாத்திய போதும் இங்கு நடைபெறும் மூன்றாவது விழா சிறப்பானதாக இருந்ததாக சுட்டிக்காட்டியது இங்கு குறிப்பிடத்தக்கது. ஆங்கில மொழி ஆற்றலை வளர்த்துக் கொள்வதற்கும் அதில் ஆர்வத்தை தூண்டுவதற்கும் இத்தகைய விழாக்கள் அடிக்கடி நடாத்தப்பட வேண்டியது அவசியமாகும். அமைப்புக்குழுவின் கன்னி முயற்சி வெற்றியளித்துள்ளது என்பதில் எவ்வித சந்தேகமுமில்லை.