Wednesday, March 13, 2019

முள்ளிவாய்க்கால் ஆத்மசாந்திப் பூசை நிகழ்வு

ads

அன்பார்ந்த மக்களே! அனைத்து ஞானமும் (ஜோதிடக்கலை உட்பட) இறைஞானம் எனும் பிரபஞ்ச ஞானத்தில் இருந்தே பெறப்படுகின்றன. இந்தப் பிரபஞ்சம் மூன்று லோகங்களால் ஆனது. அவை டிவைஸ்பியர் (Divinesphere), செலஸ்க்டிக்கல்ஸ்பியர் (Selesticalshere ) மற்றம் ஏர்த்ஸ்பியர் (Easrthshere) ஆகும். இதில் டிவைன்ஸ்பியர் எனப்படுவது அனைத்தையும் தன்னில் அடக்கிக் கொண்டிருக்கும் வெளி லோகம். இது இறைவன் என்னும் பெரும் சக்தி. இது ஒளி வடிவானது பிரபஞ்சம் முழுவதும் இதனுள் அடக்கம்.

இதற்கு அடுத்ததாகவுள்ளது செலக்ஸ்டிகல்ஸ்பியர் எனப்படும் வானலோகம் ஆகும். இதில் தான் நட்சத்திரங்களும் கிரங்களும் அமைந்துள்ளன. இவை இயங்கத் தேவையான சக்தி வெளி லோகத்தில் இருந்து ஒளி வடிவாக இந்த லோகத்தை வந்தடைகின்றது.

இறுதியாகவுள்ளது பூவுலோகம் எனப்படும் ஏர்த்ஸ்பியர். இந்த லோகம் வான லோகத்தில் இருக்கும் நட்சத்திரங்கள், கிரகங்கள் ஆகியவற்றில் இருந்து வெளிவரும் சக்தியினால் இயக்கப்படும்.

மனிதனின் ஆத்மா வெளிலோகத்தில் உருவாகி வான லோகத்தைக் கடத்து புலோகத்தில் ஒரு உயிராய் பிறக்கிறது.

இறந்த பின்னர் இந்த ஆன்மா மீண்டும் வெளிலோகத்தை அடைந்து அங்கிருக்கும் ஒளியோடு – கடவுளோடு கலக்க வேண்டும்.

இரண்டு லோகங்களுக்கும் இடையேயுள்ள வானலோக இரகசியங்களான (நட்சத்திரங்கள், கிரகங்களின் தன்மைகள், சந்திரன், சூரியன் ஆகியவற்றை) மனிதன் அறிந்து கொண்டால் மட்டுமே ஆன்மா இந்த லோகத்தைக் கடந்து ஒளியோடு இணைய முடியும்.

ஆக, மனிதனின் ஆன்மா ஒளியோடு இணைய வானசாஸ்த்திரம், ஜோதிடக்கலை ஆகிய இரண்டையும் அவன் முழுமையாக அறிந்து உணர வேண்டும். இதுவே ஆன்மா – ஒளி இணைப்பு என்பதும், பரமாத்மா – ஜீவாத்மா என்பதும், இதுவே ஆன்மா – ஒளி இணைப்பு, முக்தி, மோட்சம் எனப்படுவதும் ஆகும்.

வானலோகம் :
நட்சத்திரங்கள் மிக மிக தொலைவில் உள்ளவை. இரவில் கூட்டம் கூட்டமாக அமைந்திருக்கும் நட்சத்திரங்களை நாம் பார்க்கும் போது அவை அருகருகே இருப்பது போல் தோன்றும் அது உண்மையல்ல. அவற்றுக்கிடையே காணப்படும் தூரம் பல ஒளியாண்டுகள் ஆகும். ஆனால் நம் பார்வைக் கோணத்தில் அவை ஒன்றன்பின் ஒன்றாக இருப்பது போல் காட்சியளிக்கின்றன. கோள்கள் அல்லது கிரகங்களும் வானவீதியில் சூரியனை மையமாக வைத்து வலம்வந்து கொண்டிருக்கின்றன.

பூவுலோகம் :
ஜோதிடக் கலையின் மையப் புள்ளி பூமிதான். இந்த ஜோதிடம் மூலமாகத்தான் அந்தப் பரம்பொருள் உலகை ஆள்கிறது. நம் ஜனன நேரத்தில் சூரியன் இருந்த நட்சத்திரக் கூட்டத்தை லக்கணம் என்கிறோம். சந்திரன் இருந்த நட்சத்திரக் கூட்டத்தை ராசி என்கிறோம். சூரியன், சந்திரன், நட்சத்திரக் கூட்டங்களையும் வைத்து பூமியில் ஏற்படும் மாற்றங்களை ஜோதிடக் கலையின் நுணுக்கங்களை அறிந்தவர்களினால் மாற்றங்கள் ஏற்படி நிகழும் என்பதை சரியாகக் கணித்துக் கூற முடியும்.

குறிப்பு :
ஓர் இடத்திலிருந்து இன்னுமோர் இடத்தைச் சென்றடைவதற்கு இடையில் ஓர் காடு உள்ளது. அந்தக் காட்டின் இரகசியங்களை அறிந்தால்தான் அதன் வழியே பயணித்து மற்ற இடத்தை அடைய முடியும். இதுதான் தத்துவம்.

காலச்சுழற்சித் தத்துவம் :
கிரகங்களின் இருப்பை விட அதன் சேர்க்கையே பூமியில் பெரும் தாக்கங்களை உருவாக்குகின்றது. அதாவது நமது சூரிய குடும்பத்தின் இரு பெரு கிரகங்களான குரு (ஜுபிட்டர்), சனி (சாட்டான்) ஆகிய இரு கிரகங்களின் சேர்க்கையே பூமியில் தாக்கங்களை உருவாக்குகின்றது. இந்த இரு கிரகங்களும் பூமியோடு 20 வருடங்களுக்கு ஒரு முறை ஒரே நேர்கோட்டில் வரும். இவ்வேளையில்தான் பெரும் மாற்றங்கள் பூமியில் நிகழ்கின்றன.

வரலாற்றை மாற்றியமைத்த மன்னர்களின் பிறப்பு
சாம் ராச்சியங்களின் வீழ்ச்சி
மதத் தலைவர்களின் பிறப்பு, இறப்பு
பெரும் நில நடுக்கங்கள்
கடல் கொந்தழிப்பு போன்ற இயற்கையின் சீற்றங்கள்
பிளேக் போன்ற கொள்ளை நோய்கள்

போன்றவை அனைத்தும் 20 வருடங்களுக்கு ஒரு முறை நிகழும். இன்றைய ஜோதிடக் கலையிலேயே இது உண்மை என்று ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.

குரு, சனிச் சேர்க்கை இந்த வருடம் குறிப்பிட்ட ராசியில் நிகழ்ந்தால் 20 வருடங்கள் கழித்து மீண்டும் அந்தச் சேர்க்கை நிகழும் போது சோடியாட்டின் 120 பாகைகள் தள்ளியுள்ள ராசியில் அது நிகழும்.

இந்த வருடம் சோடியாக்கின் முதல் ராசியான மேச ராசியில் குரு சனிச் சேர்க்கை நிகழ்ந்தால் 20 வருடங்கள் கழித்து 120 டிக்ரி தள்ளியுள்ள நான்காவது ராசியான கடக ராசியில் அது நிகழும். மீண்டும் 20 வருடங்கள் கழித்து 120 டிக்ரி தள்ளியுள்ள எட்டாவது ராசியான விருட்சிகத்தில் அது நிகழும். அடுத்து 20 வருடங்களின் பின் விருட்சிக ராசியில் இருந்து 120 பாகை தள்ளியுள்ள பன்னிரண்டாவது ராசியான மீன ராசியில் அது நிகழும். இவ்வாறு மூன்று ராசிகள் தள்ளித்தள்ளி ஒவ்வொரு 20 வருடங்களுக்கு ஒருமுறை குரு சனி இணைப்பு நிகழ்கிறது. இதை டிரிப்பிளிசிட்டி (வுசipடiஉவைல) என்று அழைப்பார்கள். ஒவ்வொரு டிரிப்பிளிசிட்டியும் ஒவ்வொரு பூதத்தினால் ஆளப்படும். நீர், நிலம், காற்று, ஆகாயம் ஆகிய நான்கு பூதங்களில் எந்தப் பூதத்தின் ஆளுமையின் ஒரு குறிப்பிட்ட டிரிப்பிளிசிட்டி அமைகிறதோ அதற்கு ஏற்ப பூமியில் தாக்கம் ஏற்படும்.

உதாரணம் : ஒரு டிரிப்பிளிசிட்டி நீர் என்னும் பூதத்தினால் ஆளப்பட்டால் பெரும் வெள்ளம், சுனாமி போன்ற அழிவுகள் பூமியில் ஏற்படும். நிலம் எனும் பூதத்தினால் ஆளப்பட்டால் நிலநடுக்கம், எரிமலை வெடிப்புக்கள், போர்கள் போன்றவை அதிகமாகும். காற்று என்னும் பூதத்தின் ஆளுமையில் கொள்ளை நோய்கள், பூமியில் புரட்சிகள், கலகங்கள் அதிகரிக்கும். ஆகாயம் எனும் பூதத்தின் ஆளுமையில் வரட்சி, பஞ்சம் போன்றவை தலைவிரித்தாடும், கொடுங்கோல் மன்னர்களின் கையில் சிக்கி மனிதர்கள் வாடும் நிலை ஏற்படும்.

மூன்று வகையான டிரிப்பிளிசிட்டி :
ஒவ்வொரு 20 வருடங்களுக்கு ஒரு முறை குரு – சனி சேர்க்கை ஒவ்வொரு நான்காவது ராசியில் நிகழ்கிறது. இப்படி 12 டிரிப்பிளிசிட்டிகள் நடந்து  முடியும் பொழுது ஜோடியாக்கில் உள்ள 12 ராசிகளிலும் டிரிப்பிளிசிட்டிகள் நடந்து முடிந்திருக்கும். 13வது டிரிப்பிளிசிட்டியின் போது அடுத்த புதிய சுற்று ஆரம்பமாகும். இப் 13வது டிரிப்பிளிசிட்டி மிக முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படும். இது 260 வருடங்களுக்கு ஒரு முறை நிகழும்.

முதல் சுற்று மேச ராசியில் முதல் டிரிப்பிளிசிட்டி நிகழ்ந்திருந்தால் அடுத்த சுற்றில் முதல் டிரிப்பிளிசிட்டி அடுத்த ராசியான ரிசப ராசியில் நிகழும். 240 வருடங்கள் இரண்டாவது சுற்று முடிந்து 260 ஆவது வருடம் மூன்றாவது சுற்று நடைபெறும்.

960 வருடங்களில் இந்த சுழற்சி நிறைவுபெறும். மீண்டும் புதிய சுழற்சி மேச ராசியில் இருந்து ஆரம்பமாகும். ஆக 20 வருடங்கள், 260 வருடங்கள், 960 வருடங்கள் குரு – சனி சேர்க்கையில் முக்கியமானவை. 20 வருடங்களுக்கு ஒரு முறை நடைபெறும் சேர்க்கை பெரிய இணைப்பு என்று அழைக்கப்படும். இந்த இணைப்பின் போது பூமியில் மாற்றங்கள் ஏற்படும். அவை குறிப்பிடத்தக்க மாற்றங்களாக இருந்தாலும் கூட மிகப்பெரிய மாற்றங்களாக இருக்காது.

260 வருடங்களுக்கு ஒரு முறை நிகழும் குரு – சனி சேர்க்கையே மிகப் பெரிய இணைப்பு என்று அழைக்கப்படும். இந்த இணைப்பின் போது மிகப்பெரிய மாற்றங்கள் பூமியில் நிகழும்.

960 வருடங்களுக்கு ஒரு முறை நிகழும் குரு – சனி சேர்க்கையே மிக மிக முக்கியமானது. இது உச்சக்கட்ட இணைப்பு எனப்படும். இந்தச் சேர்க்கை நிகழும் போதுதான் வரலாற்றையே மாற்றியமைக்கும் மிகப்பெரிய மாறுதல்கள் பூமியில் நிகழும். உதாரணம் : இஸ்லாம் மதம் உருவானதும் இந்த உச்சக்கட்ட இணைப்பின் போதுதான். இந்த குரு – சனி இணைப்பு நம்மிலேயே பெரும் மாற்றங்களையும் தாக்கங்களையும் உண்டாக்கினாலும் இந்த இணைப்பு நிகழும் போது சூரியனின் இருப்பு, செவ்வாய்க் கிரகத்தின் இருப்பு ஆகியவற்றைப் பொறுத்து இந்த மாற்றங்களின் வீரியம் கூடும் அல்லது குறையும். இதற்கு அடி நாதமாக விளங்குவது காலச்சுழற்சித் தத்துவம்.

கிரகங்கள் சூரியனைச் சுற்றி ஓர் குறிப்பிட்ட ஒழுங்கு முறையோடு சுற்றி வருவதனால் பூமியில் நிகழும் மாற்றங்களிலும் ஓர் ஓழுங்குள்ள சுழற்சி காணப்படும் என்பதே இக்காலச்சுழற்சித் தத்துவமாகும்.

மிக உன்னதமான நிலையை அடைந்த ஒன்று மீண்டும் கீழ் நிலையை அடைந்தாக வேண்டும். மிகக் கீழ்நிலையில் இருக்கும் ஒன்று மேல் நிலைகளை அடைந்தே தீரும். ஜோதிடக்கலை கூட இந்தக் காலச்சுழற்சித் தத்துவத்திற்கு உட்பட்டதுதான்.
இவ்வகைப்பட்ட இயற்கைகளுடன் உருவானதுதான் இரு வினைகளான இறப்பும், பிறப்பும். இதுவும் இயற்கையின் சீற்றங்களுக்கு உட்பட்டே தீரும். இவற்றையும் இயற்கையின் நியதிகளோடேயே நடாத்திச் செல்வதுதான் நியதி. இப்படிப்பட்ட நியதியின் கீழ்தான் 2019.02.19 ஆம் திகதியன்று மாசி மக தினத்தில் முள்ளிவாய்க்காலில் நடாத்தப்பட்ட ஆத்மசாந்திப் பூசையும் ஆகும். இந்த மாசி மாதம் நாம் தெரிந்தும் தெரியாமலும் செய்த அல்லது செய்கின்ற தவறுகளுக்கெல்லாம் பரிகாரமாக அமையும். இப்பொறுப்புகள் பரம்பொருளால் என்னிடம் ஒப்புவிக்கப்பட்டவையாகும்.


இவற்றையெல்லாம் ஒன்றாக இணைத்தே பித்துருக்கள் என்பது. 

எனது ஆன்மீகப் பணிகள் கைலாயநாதர் ஆன்மீகம் - எல்லாம் அது அதுவே எல்லாம், உண்மைப் பாதை, நோக்கம் மானிட மேன்மை – என்ற தலைப்பின் கீழ் நடைமுறைப் படுத்தப்படுகின்றது. இதில் வேறு யாருடைய பங்களிப்போ தலையீடோ இல்லை. எல்லாம் எனக்கான குரு அந்தப் பரம்பொருளே.

இதன் அடிப்படையில் 2009 மே மாதத்தில் யுத்தம் நிறைவுபெற்றதும் என்னைக் கைலாயம் அழைத்த பரம்பொருள் புனித கங்கையின் மூலம் இலங்கையின் கதிர்காமம் உட்பட பல இடங்களிலும் ஆலய அபிஷேகங்கள் செய்யப்பட்டு புனிதமாக்கப்பட்டது. இதில் முக்கியமான ஓர் நிகழ்வு மாமாங்க ஈஸ்வரர் ஆலயம் ஆகும். இது நாம் இருப்பது பரந்துபட்ட இலங்கை, அவ் இலங்கையின் சிறிய வடிவமும் ஆகும். இவ் அபிஷேகமானது எனது மகனின் மூலம் நடாத்தப்பட்டது. அப்போது வயது ஒன்பது ஆகும். கள்ளம், கபடம், வஞ்சம், பொறாமையற்ற மனதில் இருந்தே அது செய்யப்பட்டிருக்கின்றது. அப்போது செய்த குரு பூசாரியே என் முள்ளிவாய்க்கால் ஆத்மசாந்திப் பூசைக்கும் அழைக்கும்படி இறை உத்தரவு தரப்பட்டது. இந்த இறை உத்தரவானது இற்றைக்கு ஐந்து வருடங்களுக்கு முன் எனக்கு அசரீதி மூலம் காதிற்குள் சொல்லப்பட்டது. இதன் அடிப்படையில் அந்தப் பரம்பொருள் என்னை காசி, கயா, பிரயாகை, அமரநாத், கங்கை, பத்திரிநாத், கேதாரநாத் போன்ற இடங்களிலெல்லாம் இவ் ஆத்மசாந்தி பிதிரிர்க்கடன்கள் முடிக்கப்பட்டு மாமாங்க ஈஸ்வரர் இரண்டாம் நிலைக் குருக்களினால் முள்ளிவாய்க்காலில் நிறைவானது என்பதுதான் உண்மை.

இந்த நிகழ்வின் போது சிவபெருமானுக்கும் பார்வதிக்கும் திருமணம் நடந்த நவயுகநாராயணன் என்று அழைக்கப்படும் ஆலயத்தில் திருமணத்திற்காக பிரம்ம தேவரால் உருவாக்கப்பட்ட யாககுண்டம் மூன்று யுகங்களான இன்றும் அணையாமல் எரிந்துகொண்டே இருக்கின்றது. இதற்கு நாராயணனே பாதுகாவலராக உள்ளார். இதனால் திதியுகநாராயணன் என்றும் பெயரைப் பெறுகின்றது. அந்த குண்டத்தில் ஆகுதியிட்டு அதில் பெறப்பட்ட சாம்பல் கதிர்காமத் திருநீருடன் கலந்து அங்கு வந்திருந்த மக்களுக்கும் கொடுக்கப்பட்டது. இதைப் பூசினால் கருமவினைகள் நீங்கும் என்பது ஒரு நியதி.

இந்நிகழ்வானது எதிர்வரும் ஆண்டுகளில் ஒவ்வொரு மாசி மகத்தன்றும் தங்கராசா உதயராசா ஆகிய என்னால் பித்ரு கடனாக ஆத்மநாந்திப் பூசை நிகழும் என்பதைனையும் அனைவருக்கும் அறியத்தருகிறேன்.
இதனைத் தொடர்ந்து எதிர்வரும் மாமாங்க ஈஸ்வரரின் ஆடி அமாவாசைத் தீர்த்தத்துடன் இப்பித்ருக்களின் கடன் நிறைவுபெறும். இம்முறைகள் தொடர்ந்தும் வருடா வருடம் கதிர்காமத்தினையும் இணைத்தே நடைமுறையில் இருக்கும் என்பதனையும் அறியத்தருகிறேன்.

குறிப்பு : மஹாமஹ குளத்தின் தீர்த்தம், புனித கங்கை தீர்த்தம், யமுனா தீர்த்தம், பத்திரிநாத் தீர்த்தம், கேதாரநாத்தின் தீர்த்தங்கள், அலக்நந்தா, மந்தாகினி, முக்திநாத்தின் 108 திவ்விய தேசத்தின் தீர்த்தம் அத்துடன் ராமேஸ்வரத்தின் அனைத்து தீர்த்தங்களும் மேலும் இதுபோன்ற அனேக புனித தீர்த்தங்கள் அனைத்தும் கதிர்காமம், மாமாங்க ஈஸ்வரர், கோணேஸ்வரர், திருக்கேதீஸ்வரம் (பாலாவிக் குளத்தில்) முனீஸ்வரம், கீரிமலை, நல்லூர் கந்தசாமி கோயில் அபிஷேகம் ஆகிய அனைத்து அபிஷேகமும் அதன் குளங்களிலும் மக்களின் நலனுக்காக விடப்பட்டிருக்கின்றது என்பதனையும் அறியத்தருகிறேன்.

இந்த நிகழ்வை நடாத்துவதற்காக எனக்கு உதவி புரிந்த ஒளி நிலா கிராம அபிவிருத்திச் சங்கம், முள்ளிவாய்க்கால், அதன் தலைவர் மற்றும் செயலாளர், கணக்காளார் மற்றும் உறுப்பினர்கள், ஒத்துழைப்பு வழங்கிய முள்ளிவாய்க்கால் கிராம மக்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகளையும் இறைவனின் துணையும் என்றென்றும் இருக்கும் என்பதனையும் தெரிவித்துக்கொள்கின்றேன்.

தங்கராசா உதயராசா,
நாகதம்பிரான் கோவில் வீதி,
பெரியகல்லாறு-01,
கல்லாறு.





முள்ளிவாய்க்கால் ஆத்மசாந்திப் பூசை நிகழ்வு Rating: 4.5 Diposkan Oleh: Sayan
 

Top