தற்கொலை குண்டுதாரியின் மனைவி வழங்கிய நேர்காணல்


உயிர்த்த ஞாயிறன்று இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதலில் கொழும்பு சினமன் கிரான்ட் உணவகத்தில் தற்கொலை தாக்குதலில் ஈடுபட்ட இன்ஷாப் அஹமட் என்ற தற்கொலை குண்டுதாரியின்  மனைவி அக்ஷ்கான் அலாமிதின் பிரித்தானியாவின் டெய்லி மெயில் பத்திரிக்கைக்கு நேர்க்காணலொன்றை வழங்கியுள்ளார்.

இதில் , தற்கொலை குண்டுத்தாக்குதல் இடம்பெற்ற தினத்திற்கு இரண்டு நாட்களுக்கு முன்னர் தனது கணவர் வர்த்தக நடவடிக்கைக்காக செம்பியா செல்வதாக அறிவித்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதன்படி , கடந்த வௌ்ளிக்கிழமையன்று தனது கணவரை கட்டுநாயக்க விமான நிலையம் சென்று வழியனுப்பி வைத்தாக அவர் டெய்லி மேய்ல் பத்திரிக்கைக்கு குறிப்பிட்டுள்ளார்.

தற்கொலை குண்டுத்தாக்குதல் இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு தினத்தன்று காலை 7.30 மணியளவில் தொலைப்பேசி அழைப்பொன்றை மேற்கொண்டு தனது நலன் தொடர்பில் விசாரித்தாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இந்த தற்கொலை குண்டுத்தாக்குதலை மேற்கொண்ட பயங்கரவாதி , கண்டி பிரதேசத்தில் வசித்து வந்த நிலையில் அவர் செப்பு தொழிற்சாலையொன்றின் உரிமையாளர் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

இவ்வாறானதொரு கோழைத்தனமான தாக்குதலுடன் தனது கணவர் தொடர்பு கொண்டுள்ளமை தொடர்பில் முன்னரே அறிந்திருந்தால் , அது தொடர்பில் காவற்துறைக்கு அறிவித்திருப்பேன் என அந்த பெண் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் , சங்ரில்லா உணவகத்தில் மேற்கொள்ளப்பட்ட தற்கொலை குண்டுத்தாக்குதல் தனது கணவரின் சகோதரனால் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அக்ஷ்கான் அலாமிதின் பிரித்தானியாவின் டெய்லி மேய்ல் பத்திரிக்கைக்கு குறிப்பிட்டுள்ளார்.
குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பான செய்திகளை உடனுக்குடன்   பேஸ்புக் ஊடாக தெரிந்துகொள்ள எமது பக்கத்தை லைக் செய்துகொள்ளுங்கள்

செய்திகளை உடனுக்குடன் WhatsApp இல்  தெரிந்துகொள்ள 
  0771660248 இந்த இலக்கத்தை உங்கள் தொலைபேசியில் Battinews என Save பண்ணுங்கள் 
 உங்கள் WhatsApp இருந்து JOIN என மேலே குறிப்பிட்ட எமது இலக்கத்துக்கு ஒரு மெசேஜ் அனுப்புங்கள்