அத்தியாவசிய பயணம் என்றால் பொலிஸ் அனுமதி எடுத்து வெளியில் செல்லவும்

இன்று மாலை 5.30  மணியளவில் பாதுகாப்பு ஊடக சந்திப்பு இடம்பெற்றது இதில் பொலிஸ் பேச்சாளர் ஊடகப்பேச்சாளர் ருவான் குணசேகர பல கருத்துக்களை தெரிவித்தார்

மிகவும் அத்தியாவசிய தேவைகளுக்கு வெளி இடங்களுக்கு செல்ல வேண்டி இருப்பின் அருகில் உள்ள பொலிஸ் நிலையத்தில் அதற்கான அனுமதியை பெற்று செல்லுமாறு பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார். அத்துடன் நீங்கள் பணிபுரியும் அலுவலக அடையாள அட்டை, தேசிய அடையாள அட்டையினை கையில் வைத்திருக்க வேண்டும்.

மேலும் பொலிஸாருக்கான விடுமுறை தற்காலிகமாக ரத்துச் செய்யப்பட்டுள்ளது.

குண்டுதாக்குதல் தொடர்பான விசாரணைகள் குற்றப்புலனாய்வு திணைக்களத்துக்கு ஒப்படைக்கப்பட்டுள்ளது. இதற்கு முப்படையினரின் உதவும் பெறப்படுகிறது.

தகவல்கள் தேவைப்பட்டால் 0112322485 என்ற இலக்கத்துக்கு தொடர்பு கொள்ளலாம்

வெளிநாட்டவர்கள் தொடர்பான தகவல்களை பெற 0112323015 என்ற இலக்கத்துக்கு தொடர்பு கொள்ளலாம்.

போலிப் பிரச்சாரங்களை நம்பவேண்டாம் என குறிப்பிட்டார்.

இச்சந்தர்ப்பத்தில் ஊடகவியலாளர்கள் இந்தச் சம்பவத்துக்கு காரணமானவர்கள் யார் என கேட்டபோது இது தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்றுவருகிறது எனினும் நீர்கொழும்பு கட்டுவப்பிட்டிய புனித செபஸ்தியார் தேவாலயத்தில் இடம்பெற்ற சம்பவம் தற்கொலை குண்டுத்தாக்குதல் சம்பவம் எனவும் தெரிவித்தார்.

விமான நிலையத்துக்கு 4 மணித்தியாலங்களுக்கு முன்பாக செல்லவும் . விமான பயணச்சீட்டினை வாயிலில் கையில் எடுத்துச் செல்லவும். கடும் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

இதில் விமானப்படை பேச்சாளர் இராணுவ ஊடகப்பேச்சளர் என கலந்துகொண்டனர்.