புதூர் கிராம மக்களினால் கண்டன ஆர்பாட்டம்
கடந்த ஏப்ரல் 21ஆம் திகதி மட்டக்களப்பு சீயோன் தேவாலயத்தில் இடம்பெற்ற குண்டு வெடிப்பின் உயிரிழந்த தற்கொலை சூத்தரதாரியான மொகம்மது நாசார் மொகம்மது ஆசாத் ஆகிய தற்கொலை சூத்திரதாரியின் உடல் பாகங்கள் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டிருந்த நிலையில் குற்றபுலனாய்வு மேற்கொள்ளப்பட்ட புலனாய்வு விசாரணைகளின் பின் சூத்திரதாரியின் உடல் பாகங்களை அடக்க செய்யுமாறு நேற்று மட்டக்களப்பு நீதிமன்ற நீதவான் உத்தரவு பிறப்பித்துள்ளார்

மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற உததரவுக்கு அமைய சூத்திரதாரியின் உடல் பாகங்களை அடக்கம் செய்ய மட்டக்களப்பு பொலிசாரினால் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்ட வேளையில் குறித்த உடல் பாகங்கள் மட்டக்களப்பு புதூர் ஆலையடிசோலை பொது மயானத்தில் அடக்கம் செய்யபோவதாகவும் அப்பகுதி மக்களுக்கு கிடைக்கப்பெற்ற தகவலை தொடர்ந்து அதனை  தடைசெய்யுமாறும் கோரி நேற்று கண்டன ஆர்பாட்டம் ஒன்று புதூர் பகுத்தில் முன்னெடுக்கப்பட்டது .

புதூர் கிராம மக்களினால் முன்னெடுக்கப்பட்ட கண்டன ஆர்பாட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர் எஸ் .வியாலேந்திரன் கலந்துகொண்டார்