அடிக்கல் நடும் நிகழ்வு



(பைஷல் இஸ்மாயில் )


கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஏ.எல்.அலாவூத்தீனின் அழைப்பின் பேரில் அக்கரைப்பற்று முகம்மதியாபுரம் யூனானி மருந்து உற்பத்திப் பிரிவுக்கான அடிக்கல் நடும் நிகழ்வும், தம்பிலுவில் கிராமிய வைத்தியசாலைக்கான சமயலறை மற்றும் மருந்துக் களஞ்சியசாலை போன்றவற்றுக்கான அடிக்கல் நடும் நிகழ்வு ஆகியன நேற்று  (22) கல்முனை பிராந்திய ஆயுர்வேத வைத்தியசாலைகளின் இணைப்பாளரும், நிந்தவூர் மாவட்ட ஆயுர்வேத வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகருமான வைத்திய கலாநிதி எம்.ஏ.நபீல் இடம்பெற்றது.

இந்த கட்டிட அடிக்கல் நடும் நிகழ்வுக்கு கிழக்கு மாகாண சுகாதார, சுதேச மருத்துவ அமைச்சின் செயலாளர் ஏ.எச்.எம்.அன்சார், கிழக்கு மாகாண சுதேச மருத்துவ ஆணையாளர் வைத்திய கலாநிதி திருமதி ஆர்.ஸ்ரீதர், அக்கரைப்பற்று பிரதேச சபை தவிசாளர் எம்.ஏ.றாசிக், ஆயுர்வேத திணைக்கள உயர் அதிகாரிகள், வைத்தியர்கள், உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட பலர் இதில் கலந்துகொண்டு இதற்கான அடிக்கல்லினை நாட்டி வைத்தனர்.

சுமார் 50 இலட்சம் ரூபா நிதியின் கீழ் தம்பிலுவில் கிராமிய வைத்தியசாலைக்கான சமயலறை மற்றும் மருந்துக் களஞ்சியசாலையும், சுமார் 40 இலட்சம் ரூபா நிதியின் கீழ் அக்கரைப்பற்று முகம்மதியாபுரம் யூனானி மருந்து உற்பத்திப் பிரிவுக்கான கட்டிடடிடமும் நிர்மாணிக்கப்படவுள்ளதும் குறிப்பிடத்தக்கது.