மட்டக்களப்பு மாவட்ட 326 பட்டதாரிகளுக்கு நியமனம் !

மட்டக்களப்பு மாவட்டத்தில் 2012, 2013 ஆம் ஆண்டுகளில் வெளிவாரி பட்டம் பெற்ற 326 பட்டதாரிகளுக்கான நியமனங்கள் 18.09.2019 அன்று அலறி மாளிகையில் வழங்கப்படவுள்ளன. அதற்கான கடிதங்கள் தேசிய கொள்கைகள் பொருளாதார அமைச்சினால் அனுப்பப்பட்டுள்ளன.

மேற்படி நியமனம் பெறவுள்ள பட்டதாரிகளின் பெயர் விபரம் தங்களது பிரதேச செயலகங்களில் அறிவிப்புப் பலகையில் காட்சிப்படுத்தும் வண்ணம் மாவட்ட செயலகத்தினால் அனுப்பிவைக்கப்பட்டுள்ளன. இக்கடிதங்கள் கிடைக்கப்பெறாதவர்கள் தங்களது பெயர்களை உறுதிசெய்து 18.09.2019 அன்று அலறி மாளிகையில் நடைபெறவுள்ள வைபவத்தில் கலந்துகொண்டு நியமனங்களைப் பெற்றுக்கொள்ளுமாறு மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர்  மா.உதயகுமார் அவர்கள் தெரிவித்தார்.