வாகன விபத்தில் இருவர் உயிரிழப்பு; மூவர் காயம்

ஹபரண – பொலன்னறுவை பிரதான வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளதுடன், மூவர் காயமடைந்துள்ளனர். இந்த விபத்து நேற்று (புதன்கிழமை) இடம்பெற்றுள்ளது.

ஹபரணயிலிருந்து பொலன்னறுவை நோக்கிப் பயணித்த முச்சக்கரவண்டியொன்றும் பொலன்னறுவையிலிருந்து ஹபரண நோக்கிப் பயணித்த வான் ஒன்றும் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

இந்த விபத்தில் காயமடைந்தவர்கள் ஹபரண பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

விபத்தில் தியசென்புர பகுதியைச் சேர்ந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இருவரே உயிரிழந்துள்ளனர்.

குறித்த இருவரும் விபத்தில் காயமடைந்த நிலையில், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னரே சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளனர்.

உயிரிழந்தவர்களின் சடலங்கள் பிரேத பரிசோதனைகளக்கான ஹபரண பிரதேச வைத்தியசாலை மற்றும் தம்புள்ளை ஆதார வைத்தியசாலைகளில் வைக்கப்பட்டுள்ளன.

விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.