![]() |
AI IMAGE |
மட்டக்களப்பு மங்களராம விகாரையில் தங்கியிருந்து கல்லடி பாலத்துக்கு அருகில் கடலை வண்டிலில் கடலை வியாபாரம் செய்து வந்த கடுகன்னாவை சேர்ந்த 29 வயது இளைஞன் ஒருவரை 140 மில்லி கிராம் ஹெரோயின் போதை பொருளுடன் கைது செய்தனர்
இவ்வாறு கடந்த 4 வருடங்களாக விகாரையில் தங்கியிருந்து வீடுகளில் சரிந்து வளர்ந்து வரும் தென்னை மரங்களை இரும்பு கம்பி கேபிள் இழுத்து கட்டி வரும் நடமாடும் சேவையில் ஈடுபட்டு வரும் அல்பிட்டியைச் சேர்ந்த ஒருவரை 170 மில்லி கிராம் ஹெரோயின் போதை பொருளுடன் கைது செய்தனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்ட வியாபாரிகளை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸ் நிலைய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.