மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு முன்னாலுள்ள ஹோட்டலில் தீ விபத்து


மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு முன்னால் அமைந்துள்ள ஹோட்டல் ஒன்றில் இன்று இரவு திடீரென தீப்பற்றி எரிந்துள்ள சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது

மின்சாரத்தில் ஏற்பட்ட ஒழுக்கு காரணமாகவே இவ்விபத்து ஏற்பட்டது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தீ விபத்து நடந்த வேளையில், ஹோட்டல் இரவு வியாபாரம் முடிந்த பின் பூட்டப்பட்டிருந்த நிலையில் அங்கு வேலை செய்த ஏழு தொழிலாளர்கள் உறங்கிக் கொண்டிருந்தனர். ஹோட்டலின் கதவை உடைத்து அனைவரும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர்.

மட்டக்களப்பு மாநகரசபை மற்றும் பொலிஸார் , 04 தீயணைப்பு வாகனங்களின் உதவியுடன் தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.