புலமைப்பரிசில் பரீட்சையில் மாவட்டரீதியில் 193 புள்ளிகளை பெற்று சாதனை புரிந்த மாணவன் வரதராஜன் வற்ஷன் போலைதமது பாங்கில் புலமைப்பரிசில் பரீட்சையில் மாவட்ட ரீதியில் சாதனை புரிந்த மாணவன் வரதராஜன் வற்ஷன் போலை  அவருக்கு தந்தை மற்றும் வின்சன் டீ பவுல் பாலர் பாடசாலை ஆசிரியர்களு ம்  பாராட்டுகிறார்கள்.


இருதயபுரம் திரு இருதயநாதன் பங்கைச் சேர்ந்த திரு.திருமதி.வரதராஜன் சுஜாந்தினியின் மகனாகிய வற்ஷன் போல் நடைபெற்று முடிந்த புலமைப் பரிசில் பரீட்சையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் அதிகூடிய புள்ளிகளை பெற்று தமது பங்கிற்கு பெருமை சேர்த்துள்ளதாக பங்குத் தந்தை அருட்பணி.பேதுரு ஜீவராஜ் அடிகளார் தெரிவித்துள்ளார்.


இருதயபுரம் புனித வின்சன்டீ பவுல் முன்பள்ளி பாலர் பாடசாலையில் தனது ஆரம்ப செயற்பாடுகளில் திறமையை வெளிக்காட்டி தற்போது புனித மிக்கேல் ஆரம்ப கல்லூரியில் கல்வியினை தொடரகின்ற இவர் 193 புள்ளிகளை பெற்றிருப்பது தமக்கு மகிழ்ச்சியைக் கொடுப்பதாகவும் தங்களது முன்பள்ளி பாடசாலைக்கு பெருமை சேர்த்த மாணவனாக திகழ்வதை இட்டு மகிழ்ச்சி அடைவதாகவும் பாடசாலையின் ஆசிரியர்கள் தெரிவிக்கின்றார்கள்.
இந்த மாணவனையும் அவருடைய பெற்றோரையும் இருதயபுரம் திரு இருதயநாதர் பங்கு சமூகம் வாழ்த்திப் பாராட்டுகின்றது.