தேயிலை உற்பத்தித் தயாரிப்பு 2.3 சதவீதத்தினால் அதிகரிப்பு



தேயிலை உற்பத்தித் தயாரிப்பு கடந்த வருட செப்ரெம்பர் மாதத்துடன் ஒப்பிடுகையில் இந்த வருடம் 2.3 சதவீதத்தினால் அதிகரித்துள்ளது என்று இலங்கை தேயிலை முகவர் நிலையம் அறிவித்துள்ளது.

கடந்த வருடத்தின் செப்ரெம்பர் மாதம் 19.4 மில்லியன் கிலோ கிராமாக அமைந்திருந்த தேயிலை உற்பத்தி தயாரிப்பு இந்த வருடம் செப்ரெம்பர் மாதம் வரை 21.7 மில்லியன் கிலோ கிராமாக அதிகரித்துள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளது.

தாழ்நில தேயிலை உற்பத்தி மூலமான தயாரிப்பு அதிகளவில் காணப்பட்டுள்ளது என்றும் தெரிவித்துள்ளது.