பட்டிருப்பு கல்வி வலயத்தில் நேர்சிந்தனை வகுப்பறை முகாமைத்துவச் செயலமர்வு

(சித்தா)
பாடசாலைகளில் இடம்பெறும் கற்றல் - கற்பித்தல் நடவடிக்கைகளின் போது மாணவர்கள் பல்வேறு வகையான உடல் மற்றும் உளத் தண்டனைகளுக்கு உட்படுத்தப்படுவது இன்று பல்வேறு தரப்பினர்களாலும் அவதானிக்கப்பட்டுள்ளது. அந்தவகையில் வகுப்பறை கற்றல் -கற்பித்தல் சூழலை மகிழ்ச்சிகரமானதாகவும் மாணவர்கள் விருபம்பக்கூடிய சூழலாகவும் குறிப்பாக ஆசிரியர் - மாணவர் உறவு சீராகப் பேணும் சூழலை ஏற்படுத்துவதற்காக 
கிழக்கு மாகாணத்தின் பதினேழு கல்வி வலயங்களிலிருந்து தெரிவு செய்யப்பட்ட எண்பத்தைந்து பாடசாலைகளில் சிறந்த நடத்தைகளை நடைமுறைப்படுத்தி முன்னேற்றுவதை இலக்காகக் கொண்ட நேர்சிந்தனை வகுப்பறை முகாமைத்துவம் எனும் நிகழ்ச்சித் திட்டம் யுனிசெப் நிறுவனத்தின் அனுசரணையுடன நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது.
இந் நிகழ்ச்சித் திட்டத்திற்கு அமைவாக பட்டிருப்பு கல்வி வலயத்தில் நேர்சிந்தனை வகுப்பறை முகாமைத்துவச் செயலமர்வு இன்று ஆசிரியர் மத்திய நிலையத்தில் 5 பாடசாலைகளில் இருந்து தெரிவு செய்யப்பட்ட அதிபர், ஆசிரியர்களுக்காக நடாத்தப்பட்டது.
பட்டிருப்பு வலயக் கல்விப் பணிப்பாளர் திருமதி.ந.புள்ளநாயகம் அவர்கள் ஆரம்ப நிகழ்வில் பங்கேற்றதுடன் வளவாளராகவும் தொழிற்பட்டிருந்தார். அத்துடன் கல்வி அபிவிருத்திக்கான பிரதிக் கல்விப் பணிப்பாளர் திருமதி.ஜெ.பிரியதர்சன் அவர்களும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கதாகும்.