கோட்டா வென்றாலும் ரணிலே பிரதமர்
ஜனாதிபதித் தேர்தலில் கோட்டாபய ராஜபக்ஷ வெற்றிபெற்றாலும் பிரதமராக ரணில் விக்கிரமசிங்கவே தொடர்ந்து பதவி வகிப்பார் என பாராளுமன்ற உறுப்பினர் ஹிருனிகா பிரேமசந்திர தெரிவித்தார்.

கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் கூறுகையில்,

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷ வெற்றிபெற்றாலும் பிரதமராக ரணில் விக்கிரமசிங்கவே தொடர்ந்து பணியாற்றுவார்.

ரணில் விக்கிரமசிங்கவை பிரதமர் பதவியிலிருந்து நீக்க வேண்டு மென்றால் பாராளுமன்றத்தின் பெரும்பான்மை ஆதரவை கோட்டாபய ராஜபக்ஷ பெற்றுக்கொள்வது கட்டாயமாகும். அவ்வாறு இல்லாது பிரதமர் பதவிக்கு வேறு நபர்களை நியமிக்க முடியாது.