கிழக்குப் பல்கலைக்கழக ஊழியர் சங்கத்தின் ஏற்பாட்டில் கல்விக் கருத்தரங்கு


கிழக்குப் பல்கலைக்கழக ஊழியர் சங்கத்தின் ஏற்பாட்டில் இவ் வருடம் கல்விப் பொது தராதர சாதாரண தர பரீட்சைக்குத் தோற்றவுள்ள மாணவ, மாணவிகளுக்கான இலவச கல்விக் கருத்தரங்கொன்று வந்தாறுமூலை விஷ்ணு மகா வித்தியாலயத்தில் நடைபெற்றது.

ஊழியர் சங்கத்தின் தலைவர் ஏகாம்பரம் ஜெகராஜு தலைமையில் நடைபெற்ற கணித பாடத்துக்கென நடைபெற்ற இக் கருத்தரங்கின் ஆரம்ப நிகழ்வில், பாடசாலையின் அதிபர் எஸ்.மோகன் கலந்து கெண்டார்.
கணிதம், ஆங்கிலம், விஞ்ஞான பாடங்களுக்கு தொடர்ச்சியாக இவ் இலவச கல்விக் கருத்தரங்குகள் நடைபெறவுள்ளதாகவும், இது முதல் கட்டமாக நடைபெறுவதாகவும் கல்கலைக்கழகத்தை அண்டிய பாடைசாலைகள் அனைத்திலும் இவ்வாறான கருத்தரங்குகளை ஏற்பாடு செய்யவுள்ளதாகவும் கிழக்குப் பல்கலைக்கழக ஊழியர் சங்கத்தின் தலைவர் ஏகாம்பரம் ஜெகராஜு தெரிவித்தார்.