பெரியகல்லாறு கடற்கரையை துப்பரவு செய்யும பாரிய நிகழ்வு



பெரியகல்லாறு கடற்கரையை துப்பரவு செய்யும பாரிய நிகழ்வு

பெரியகல்லாறு கடற்கரையை துப்பரவ செய்யும் நிகழ்வு, மண்முனை தென் எருவில் பிரதேச செயலாளர் திருமதி சிவப்பிரியாவின் வழிகாட்டலில், சமுர்த்தி முகாமைத்துவப் பணிப்பாளர் க.உதயகுமார் தலைமையில் நிலைபேறான சுற்றாடலை பாதுகாத்தல் திட்டத்தின் கீழ் நடைபெற்றது.

இந்நிகழ்வில் கருத்திட்ட முகாமையாளர்டி திருமதி சோ.தமிழ்வாணி, கல்லாறு சமுர்த்தி வங்கி முகாமையாளர் சீ.ரவீந்திரன், கரையோரம் பேணல்திட்ட உத்தியோகத்தர் மு.குகதாசன் மற்றும் கிராம உத்தியோகத்தர்கள், சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் என பெருமளவு உத்தியோகத்தர்களும் சமுர்த்தி பயனாளிகளும் பெருமளவில் கலந்து கொண்டு கடற்கரைச் சுற்றாடலை சுத்தம் செய்தனர்.

இதன்போது பெருமளவிலான பிளாஸ்ரிக் போத்தல்கள் சேரிக்கப்பட்டன. மண்முனை தென் எருவில் பிரதேச சபையின் வாகனங்கள் மூலம் இவை அப்புறப்படுத்தப்பட்டன.

இந் நிகழ்விற்க தலைமைதாங்கிப் பேசிய சமுர்த்தி முகாமைத்துவப் பணிப்பாளர் க.உதயகுமார் தனதுரையில் பின்வருமாறு குறிப்பிட்டார்.

கடற்கரையில் நாமே கழிவுகளைப் போடுகின்றோம். நாமே சுத்தம் செய்கின்றோம். இதுவே தொடாந்து நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. நாம் கழிவுகளை இங்கே போடாவிட்டால் இந்த நிலை ஏற்பாடாது.

தற்போது பனிப்படலங்கள் வேகமாக உருகி வருவதால் நாம் பல பாதிப்பக்களை சந்திக்க வேண்டி ஏற்படுகின்றது . அதற்கு காரணம் பெருமளவ பிளாஸ்ரிக் கழிவுகள் உருவாவதே. எனவே எமது எதிர்காலம் கருதி எதிர்காலச் சந்ததியை பாதுகாப்பதற்காகவும் இவற்றைத் தவிர்த்துக் கொள்ள வேண்டும். இப்பகுதியில் நாம் ஒரு கழிவுத் தொட்டியை அமைக்க இருக்கின்றோம். இதை நீங்கள் சரியாகப் பயன்படுத்தி, இந்த பிரதேசத்தை சுத்தமாக வைத்திருக்க வேண்டும் எனக் கேட்;டுக் கொண்டார்.

இதில் கரையோர திட்டமிடல் உத்தியோகத்தர் மு.குகதாசனும் சிறப்புரை நிகழ்த்தினார்.