இமயத்திற்கான கிரிக்கற் சமரில் மட்டக்களப்பு இந்துக்கல்லூரி கிண்ணத்தை சுவீகரித்தது

இந்துக்கல்லூரி மற்றும் பெரியகல்வாறு மத்தியகல்லூரி ஆகியவற்றிற்கு இடையே ,இமயத்தற்கான வருடாந்த 9வது கிரிக்கற் சமர் மத்தியகல்லூரி அதிபர் எஸ்.பேரின்பராஜா தலைமையில் 5ந்திகதி சனி காலை பெரியகல்லாறு பொது விளையாட்டு மைதானத்தில்; விறுவிறுப்பாக நடைபெற்றது. 

போட்டி இறுதியில் மட்டக்களப்பு இந்துக்கல்லூரி ஒரு ஒட்டத்தால் வெற்றிபெற்று கிண்ணத்தை நிகழ்விற்கு பிரதம அதிதியாக கலந்து கொண்ட மலையக புதிய கிராமிய கட்டமைப்பு மற்றும் சமூக அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் கலாநிதி பொறியியலார் பொன்னையா சுரேஸ், வழங்கி  வைத்தார் .

நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற மட்டக்களப்பு  இந்துக்கல்லூரி துடுப்பாட்டத்தை மேற்கொண்டு சகல விக்கட்டுக்களையும் இழந்து, 168 ஓட்டக்களைப் பெற்றுக் கொண்டது. பதிலுக்கு துடுபபெடுத்தாடிய பெரியகல்லாறு மத்திய கல்லூரி 167 ஓட்டங்களை பெற்று சகல விக்கட்டுக்களையும் இழந்து வெற்றி வாய்ப்பை நழுவ விட்டது.

பெரியகல்லாறு மத்தியகல்லூரியின் கடைசி விக்கட் இழப்பு தொடர்பான நடுவரின் தீர்ப்பு சர்ச்சைக்குள்ளானதால் மைதானத்தில் குழப்பநிலை காணப்பட்டது. அது சம்பந்தமான காணொளிகள் சமர்ப்பிக்கிப்பட்டபோதும் நடுவர் தீர்ப்பில் மாற்றம் ஏற்படவில்லை. இதனால் மைதானத்தில் குழப்பநிலை காணப்பட்டது. களுவாஞ்சிக்குடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியும் பொலிசாரும,; நிலமையைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து நடுவரின் தீர்ப்பே இறுதியானது என்ற அடிப்படையில் வெற்றி பெற்ற அணியாக மட் இந்துக்கல்லூரி உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டு பரிசளிப்பு நிகழ்வு அமைதியாக நடைபெற்றது.