ஒலுவில் பிரதேசத்தில் கரைவலை மூலம் பெருமளவு பாரை மீன்கள்



ஒலுவில் கடற்கரை வெளிச்சவீட்டு பிரதேசத்தில் கரைவலை மீன் பிடியில் ஈடுபட்ட கியாஸ் என்பவரின் வலையில் 3000க்கு மேற்பட்ட பாரை மீன்கள் பிடிபட்டன.

மீன்களைப் பார்வையிடச் சென்ற பொது மக்களுக்கும் மீன்கள் இலவசமாக வழங்கப்பட்டன .

ஒலுவில் வெளிச்ச வீட்டு கடற்கரையில் நேற்று முன்தினம் மாலை இப் பாரிய மீன்கள் பிடிபட்டதன் மூலம் ஒலுவில் பிரதேச மெங்கும் பாரை மீன்கள் மலிவான விலைக்கு விற்கப்பட்டன.

ஒரு வெள்ளைக் கருங்கன்னி பாரை மீன் 8 – 9 கிலோக்கு இடைப்பட்டது சுமார் 3500 ரூபா விலை போகின்றது . இதனால் பொதுமக்கள் மலிவான விலையில் மீனைப் பெற்றுக் கொள்ளக்கூடியதாக இருந்ததுடன், ஒலுவில் துறைமுகம் அமைக்கப்பட்டதற்கு பின்னர் பல வருடங்களுக்குப் பிறகு இப்பாரிய மீன்கள் பிடிபட்டுள்ளன. இதன் மூலம் சுமார் ஒரு கோடி ரூபாவுக்கு மேல் வருவாய் கிட்டியுள்ளதையிட்டு மீனவர்களும் ஒலுவில் பிரதேச பொது மக்களும் மகிழ்ச்சி தெரிவிக்கின்றனர்.