பொத்துவிலில் வற்றிநியூஸினால் லண்டன் சிவன் கோவிலின் நிதியில் நிவாரணம் வழங்கிவைப்பு

வெள்ளத்தால்  பாதிக்கப்பட்ட   பொத்துவில் பகுதியில்  தெரிவு செய்யப்பட சில குடும்பங்களுக்கு    வற்றிநியூஸினால் லண்டன்  சிவன் கோவிலின் நிதியில்  நுளம்புவலை , உலர் உணவு அடங்கிய நிவாரண பொதி வழங்கப்பட்டது . 

பொத்துவிலை சேர்ந்த காப்பகம் இளைஞர் அமைப்புடன் இணைந்து இப் பணி மேற்கொள்ளப்பட்டது .   இந்த வார இறுதியில் இப் பிரதேசத்தை சேர்ந்த மாணவர்களுக்கு அப்பியாசக் கொப்பிகள் வற்றிநியூஸினால் வழங்கப்படவுள்ளது . 


வற்றிநியூஸ் ஸ்தாபகர் ஆர்.சயனொளிபவன் , கிராமசேவை நிருவாக உத்தியோகத்தர் கண.இராஜரெத்தினம் , சங்காரவேல் பௌண்டேசன் அமைப்பின் செயலாளர் பிறேமானந்தன் , பொருளாளர் ரீ.குபேந்திரன் மற்றும்  காப்பாகம் அமைப்பின் உறுப்பினர்கள் , வற்றிநியூஸ் குழுவினர் ,கலந்துகொண்டு நிவாரணங்களை வழங்கி வைத்தனர் . 
வற்றிநியூஸ் இணையத்தளத்தினால்  அம்பாறை , மட்டக்களப்பு மாவட்டங்களில் நிவாரண பணிகள் இடம்பெற்று வருகிறது.

லண்டன் சிவன் கோவில் அனுசரணையில் வற்றிநியூஸ் ஊடாக விநாயகபுரத்தில் வெள்ள நிவாரணம் வழங்கி வைப்பு http://www.battinews.com/2019/12/battinews-vinayakapuram-flood-relief.html

லண்டன் ஸ்ரீ கனக துர்க்கை அம்மன் ஆலய நிதியில் வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட ஆலையடிவேம்பு மக்களுக்கு நிவாரணம்.வழங்கி வைப்பு http://www.battinews.com/2019/12/80.html