லண்டன் சிவன் கோவில் அனுசரணையில் வற்றிநியூஸ் ஊடாக விநாயகபுரத்தில் வெள்ள நிவாரணம் வழங்கி வைப்பு


வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட அம்பாறை மாவட்ட பிரதேசங்களில் வற்றிநியூஸ் இணையத்தளம் லண்டன் சிவன் கோவில்  அனுசரணையில் வெள்ள நிவாரண பணியை மேற்கொண்டு வருகின்றது . அந்த வகையில் ஞாயிற்றுக்கிழமை (22.12.2019) அன்று திருக்கோவில் பிரதேச விநாயகபுரம் பாலக்குடா பகுதியில் 40 பேருக்கு நுளம்புவலை , உலருணவு பொருட்கள் அடங்கிய நிவாரண பொதியினை வழங்கினர்.

லண்டன் சிவன்கோவில் அறங்காவலர்களினால் வற்றிநியூஸ் ஸ்தாபகர் ஆர்.சயனொளிபவன் ஊடாக வழங்கிய 238,000 ரூபா நிதியில் திருக்கோவில் சின்னத்தோட்டம் , விநாயகபுரம் பாலக்குடா , பொத்துவில் பகுதியில் இவ் நிவாரணம் வழங்கப்பட்டது .


பாலக்குடாவில் கிராம சேவை உத்தியோகத்தர் வாசு தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் திருக்கோவில் பிரதேச சபை தவிசாளர் கமலராஜன் , வற்றிநியூஸ் ஸ்தாபகர் ஆர்.சயனொளிபவன் , கிராமசேவை நிருவாக உத்தியோகத்தர் கண.இராஜரெத்தினம் , சங்காரவேல் பௌண்டேசன் அமைப்பின் செயலாளர் பிறேமானந்தன் , பொருளாளர் ரீ.குபேந்திரன் , திருக்கோவில் பிரதேச செயலக அனர்த்த முகாமைத்துவ உத்தியோகத்தர் தயானந்தன் , முன்னாள் தவிசாளர் புவிதராஜன் , கண்ணதாசன் ஆசிரியர் , சிவ தொண்டர் அமைப்பின் உறுப்பினர்கள் , வற்றிநியூஸ் அமைப்பினர் ஆகியோர் கலந்துகொண்டு நிவாரணத்தை வழங்கி வைத்தனர்.