ஜனவரி முதல் நேரடி வரியும் குறைப்பு - பந்துல


ஜனவரி முதல் நேரடி வரியும் குறைக்கப்படவுள்ள நிலையில் ஏற்கனவே மறைமுக வரிகள் குறைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள அமைச்சர் பந்துல்ல குணவர்தன மக்களுக்கு சுமையை ஏற்படுத்தாத சாதாரண வரிதிட்டத்தை செயற்படுத்துவதாகவும் தெரிவித்தார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார்.

பொருட்கள் மற்றும் சேவைகள் தொடர்பில் அறவிடப்பட்டு வந்த அனைத்து வரி அறவீடுகளும் சலுகை திட்டத்திற்கமைய இன்று முதல் கட்டுபாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளன.

ஏனைய வரி அறவீடுகள் எதர் வரும் ஜனவரி மாதம் முதல் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதற்கான வர்த்தமானி அறிவித்தலை நிதி அமைச்சர் மஹிந்த ராஜபக்ஷ வெளியிடப்படும் என்றும் அவர் கூறினார்.