மட்டக்களப்பில் மீனவர்களின் வலையில் சிக்கிய இராட்சத சுறாமட்டக்களப்பு மீனவர்களின் வலையில் இராட்சத சுறா மீன் ஒன்று பிடிக்கப்பட்டுள்ளதாக மீனவர்கள் தெரிவித்தனர்.

மட்டக்களப்பு பாலமீன் பகுதியில் கடல் மீன்பிடியில் ஈடுபடும் மீனவர்களின் வலையில் இந்த சுறா நேற்று (சனிக்கிழமை) சிக்கியுள்ளது.

சுமார் 400கிலோவுக்கு மேல் எடைகொண்டதாக இந்த இராட்சத சுறா காணப்பட்டதாக மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.

சீரற்ற காலநிலையிலும் மீனவர்கள் மீன்பிடியில் ஈடுபட்டுவரும் நிலையில் இந்த சுறாமீன் பிடிப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.