இலங்கையின் மசகு எண்ணெய் சுத்திகரிப்பு நிலைய நிர்மாண பணிகள் அடுத்தாண்டில் ஆரம்பம்


இலங்கையின் மிகப் பெரிய மசகு எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை நிர்மாணிக்கும் பணிகள் அடுத்த வருடம் ஆரம்பிக்கப்படும் என்று அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கு தேவையான மொத்த எரிபொருளில் 30 சதவீதமானவையே உள்நாட்டில் சுத்திகரிக்கப்படுகின்றன. எஞ்சிய தொகை இறக்குமதி செய்யப்படுகிறது. இதன்மூலம் பாரியளவிலான அந்நிய செலவணியை சேமிக்க முடியும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

மசகு எண்ணெய் சுத்திகரிப்பு நிலைய நிர்மாணப்பணிகள் 110 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமான செலவில் முன்னெடுக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.