மட்டக்களப்பு அம்புலன்ஸ் வண்டியிலே குழந்தை பிரசவம்!


(சோ.கிருசாயிதன்)
மட்டக்களப்பு மாவட்டத்தின் வவுணதீவில் அமைந்த 1990 சுவசரிய இலவச அம்புலன்ஸ் சேவையின் போது தாய் ஒருவர் குழந்தையை பிரசவித்த சம்பவம் ஒன்று நேற்று சனிக்கிழமை(11) இரவு இடம் பெற்றுள்ளது.

கரடியனாறு பிரதேசம் தும்பாலை எனும் கிராமத்திலே மேற் கூறியவாறு தாய்க்கு பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. இப் பொழுதில் 1990 சுவசரிய இலவச அம்புலன்ஸ் சேவையினை அழைத்த போது கரடியனாறு அம்புலன்ஸ் சேவை வேறு சேவையில் ஈடுபட்டபோது வவுணதீவு அம்புலன்ஸ் சேவை குறித்த பெண்னை ஏறிக்கொண்டு சுமார் 50 மீற்றர் செல்கையில் குழந்தை பிரசவித்துள்ளது .

தன்னையும் எனது குழந்தையையும் சுமூகமாக ஆபத்தில்லாமல் பாதுகாப்பாக கொண்டு சேர்த்த அம்புலன்ஸ் ஊழியர்களுக்கு நன்றியை குறித்த பெண்  தெரிவித்தார்.

தற்போது  தாயும் குழந்தையும் ஆரோக்கியமாக கரடியனாறு வைத்திய சாலையில்  உள்னர்.