ஐந்தம்ச கோரிக்கைகளை முன்வைத்து சமூக நல்லிணக்கத்திற்கான மாற்று திறனாளிகளின் சக்கரநாற்காலி சுற்றுப்பயணம் திருக்கோவிலை வந்தடைந்தது !

(எஸ்.கார்த்திகேசு)
ஐந்தம்சக் கோரிக்கையை முன் நிறுத்தி மாற்றுத் திறனாளிகளின் சார்பான சக்கர நாற்காலி சவாரியானது செவ்வாய்க்கிழமை மாலை திருக்கோவில் பிரதேசத்தினை வந்தடைந்ததது. இவ் சக்கரநாற்காலி சவாரியானது கடந்த முதலாம் திகதி யாழ்ப்பாணத்தில் ஆரம்பமாகி 11வது நாளான செவ்வாய்க்கிழமை மாலை திருக்கோவில் பிரதேசத்தினை வந்தடைந்ததது.
இதன்போது திருக்கோவில் பிரதேசத்தில் உள்ள இளைஞர்கள் பொது மக்கள் என பலரும் ஒன்றுகூடி சமூக நல்லிணக்க பயணத்தில் ஈடுபட்டுள்ள முஹமட் அலி, சுதாகரன் ஆகியோருக்கு வாழ்த்ததுக்களை தெரிவித்து இருந்தனர்.