திருகோணமலை மாவட்ட அரச அதிபராக அசங்க அபயவர்தன !

திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபராக நாளை (14) காலை 9.15 மணிக்கு ஜே.எஸ்.எம்.அசங்க அபயவர்தன, தனது கடமைகளைப் பொறுப்பேற்கவுள்ளாரென, மாவட்ட அரசாங்க அதிபர் காரியாலயம் தெரிவித்துள்ளது.
முன்னாள் அரச அதிபராக கடமையாற்றிய என்.ஏ.ஏ.புஷ்பகுமார ஓய்வு பெற்றுள்ளதையடுத்து, இவர் கடமைகளை பொறுப்பேற்கவுள்ளார்.
புதிய அரச அதிபர், கிழக்கு மாகாண ஆளுநர் செயலகத்தின் செயலாளராகவும்கடமையாற்றியுள்ளதுடன், இலங்கை நிர்வாக சேவை தரம் I ஐ சேர்ந்தவராவர்.