கல்முனை உவெஸ்லி உயர்தர பாடசாலையின் வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டி



(அஸ்ஹர் இப்றாஹிம்)
கல்முனை உவெஸ்லி உயர்தர பாடசாலையின் வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டி அண்மையில் பாடசாலை மைதானத்தில் அதிபர் எஸ்.கலையரசன் தலைமையில் இடம்பெற்றது.
நல்லதம்பி , தில்லையம்பலம் , வில்சன் , யோகம் இல்லங்களுக்கிடையில் இடம்பெற்ற மேற்படி இல்ல விளையாட்டுப் போட்டிக்கு கல்முனை வலய கல்விப் பணிப்பாளர் எம்.எஸ்.அப்துல் ஜலீல் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.
கல்முனை கல்வி வலய உடற்கல்வித்துறை உதவிக் கல்விப் பணிப்பாளர் , உடற்கல்வித்துறை ஆசிரிய ஆலோசகர் , கோட்ட கல்விப் பணிப்பாளர் , பாடசாலையின் ஓய்வு பெற்ற அதிபர்கள் , பாடசாலைகளின் அதிபர்கள் , ஆசிரியர்கள் , அரசியல் பிரமுகர்கள் , பழைய மாணவர்கள் , பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்ட மேற்படி இல்ல விளையாட்டுப் போட்டியில் தில்லையம்பலம் இல்லம் 521 புள்ளிகளைப் பெற்று முதலாம் இடத்தையும் , வில்சன் இல்லம் 442 புள்ளிகளைப் பெற்று இரண்டாம் இடத்தையும் , நல்லதம்பி இல்லம் 366 புள்ளிகளைப் பெற்று மூன்றாம் இடத்தையும் , யோகம் இல்லம் 347 புள்ளிகளைப் பெற்று நான்காம் இடத்தையும் பெற்றுக் கொண்டன.

சர்வதேச கராட்டி போட்டியில் பங்கேற்று இலங்கை திருநாட்டிற்கும் , பிரதேசத்திற்கும் பெயரையும் புகழையும் ஈட்டித் தந்த கல்முனை சேனைக்குடியிருப்பைச் சேர்ந்த கராட்டி வீரர் எஸ்.பாலூராஜ் பாடசாலை சமூகத்தினால் இவ் விளையாட்டு விழாவின் போது பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டார்.