மட்டக்களப்பு மாவட்டத்தில் 2020 பொதுத் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் செய்யும் நடவடிக்கை நிறைவு பெற்றது !

எதிர்வரும் ஏப்ரல் 25 ஆந் திகதி நடைபெறவுள்ள 2020 பொதுத் தேர்தலுக்கான நியமனப் பத்திரங்களை கையேற்கும் பணிகள் மட்டக்களப்பு மாவட்டத்திலும் ஐந்தாவதும் இறுதிநாளுமாகிய இன்று (19) வியாழக்கிழமை நன்பகல் 12 மணியுடன் நிறைவு பெற்றது.

Updated : தேர்தல் பிற்போடப்பட்டுள்ளது (தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசபிரிய)

மட்டக்களப்பு மாவட்ட செயலக வளாகத்தில் பொலிஸ் மற்றும் விசேட அதிரடிப் படையினரின் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் இன்றைய இறுதிநாள் வேட்புமனுக்களை மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலரும் அரசாங்க அதிபருமான திருமதி. கலாமதி பத்மராஜா தலைமையிலான தேர்தல் அதிகாரிகள் குழு பொறுப்பேற்றுக் கொண்டது. 

இப் பொதுத்தேர்தலுக்காக மட்டக்களப்பு மாவட்டத்தில் 25 சுயேச்சைக் குழுக்களும், 19 அரசியல் கட்சிகளுமாக 44 வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யதுள்ளன.
இன்றய தினத்தில் 12 அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளும் 19 சுயேச்சைக் குழுக்களும் வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்துள்ளன.


அருண்மொழிவர்மன் வேற்கரதீசன் மாணிக்கம் தம்பி முத்து தலைமையிலான தமிழர் விடுதலைக் கூட்டணி, மகேந்திரன் புவிதரன் தலைமையிலான தேசிய ஜனநாயக முன்னணி, சோமசுந்தரம் கனேசமூர்த்தி தலைமையிலான தமிழ் மக்கள் தேசிய கூட்டனி, தருமலிங்கம் கிருபாகரன் தலைமையிலான முன்னிலை சேசலிசக் கட்சி, 

பசீர் சேகுதாவூத் தலைமையிலான ஐக்கிய சமாதான கூட்டமைப்பு, சாமித்தம்பி ஆசைத்தம்பி தலைமையிலான ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி, சோலமன் பெசில் சில்வஸ்டர் தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சி, 

அலி ஸாஹிர் மௌலானா தலைமையிலான ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ், அமீர்அலி சிஹாப்தீன் தலைமையிலான ஐக்கிய மக்கள் சத்தி, உசனார் முகமட் றபாய் தலைமையிலான மௌபிம ஜனதா பக்ஸ, செய்யித் முஃசின் பர்ஹான் சக்காப் மௌலானா தலைமையிலான ஜனநாயக ஐக்கிய முன்னணி, டெவோன் பிவால ஜெயகொடி தலைமையிலான அபே ஜனபல ஆகிய அரசியல் கட்சிகளும்,



வித்தியாவதி முரலிதரன், அப்துல் மஜீட் முகமட் பிர்தௌஸ், ஜோன் நியூமன் ஸ்ரரக், அமித் கமகே, இலவத்தம்பி அப்துல்காதர், ஏ.எம். அஸ்மி, ஏம்.எச்.எம். ஜிப்ரி, பைக்கீர் முகைதீன் முகம்மது இர்சாத், முகம்மது முஸ்தபா முகம்மது றுகைல், ஆரசரத்தினம் யுகேந்திரன், 

முகமட் அலி முகமட் அமீன், இஸ்மாயில் பதியுதீன், கமர்தீன் ஹாஜயார் அப்துல் வாஜித், அசனார் முகம்மது அஸ்மி, முஹமட் ஹசன் முஹமட் ஜிப்ரி, நடராசா விசோதரன், இரம்லான் முஹமட் றுஸ்வின், மீராசாகிப் முகமட் ரிபாஸ், ஜலால்தீன் முகமட் றியாஸ், அம்பிடியே சுமனரதன தேரர், முகம்மது அபூபக்கர் நிசால்தீன் ஆகியோர் தலைமைகளிலான சுயேச்சைக் குழுக்களும் வேட்புக்களைத் தாக்கல் செய்துள்ளன. 

பி.ப. 1.30 மணிக்கு இவ் வேட்புமனுக்கள் பரிசீலிக்கப்பட்டு நிராகரிக்கப்பட்டவை தவிர ஏற்றுக் கொள்ளப்பட்ட கட்சிகளும் சுயேச்சைக் குழுக்களுமே தேர்தலில் போட்டியிடமுடியுமென்பது குறிப்பிடத்தக்கது.