கொலைகளால் அதிர்ந்த கொட்டகெத்தன பகுதியில் மீண்டுமொரு படுகொலை !

(ஜே.எப்.காமிலா பேகம்)
கடந்த காலங்களாக அதிர்ச்சிமிக்கப் படுகொலைகள் அரங்கேறிய இரத்தினபுரி – கொட்டகெத்தன பிரதேசத்தில் மீண்டுமொரு படுகொலை இன்று வெள்ளிக்கிழமை நிகழ்ந்துள்ளது.

கஹவத்த – கொட்டகெத்தன ஓபாத்த வீதியில் உள்ள வீடொன்றின் மலசல கூடத்திலிருந்து 42 வயது மதிக்கத்தக்க இரண்டு பிள்ளைகளின் தந்தை இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டிருக்கின்றார்.

குறித்த வீட்டில் வைத்தே இந்தப் படுகொலை இடம்பெற்றிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகின்றது.

கஹவத்த பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.