ஜூலை மாதத்திற்கு தள்ளிப்போகும் பொதுத்தேர்தல் ?

(ஜே.எப்.காமிலா பேகம்)
பொதுத்தேர்தல் எதிர் மனுக்கள் உட்பட பல்வேறு சர்ச்சைகளுக்கு மத்தியில் தேர்தல்கள் ஆணைக்குழு, பொதுத்தேர்தலை நடத்த மாற்றுத்திகதியை நிர்ணயம் செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ஏற்கனவே ஏப்ரல் 25ம் திகதி குறிக்கப்பட்ட தேர்தலை ஜூன் 20ம் திகதியாக மாற்றப்பட்டது.

இருப்பினும் தற்போது உள்ள சூழலில் ஜூலை மாத நடுப்பகுதியில் தேர்தலை நடத்துவதற்கான திகதியை தேர்தல்கள் ஆணைக்குழு குறிக்கும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.