மட்டு - புத்தம்புரி பிரதேசத்தில் இயங்கி வந்த கசிப்பு நிலையம் பொலிஸாரால் முற்றுகை (காணொளி)(ஏறாவூர் நிருபர் எம்.ஜி.ஏ. நாஸர்)
மட்டக்களப்பு- கரடியனாறு பொலிஸ் பிரிவிலுள்ள புத்தம்புரி பிரதேசத்தில் இயங்கிவந்த கசிப்பு தயாரிப்பு நிலையமொன்று பொலிஸாரினால் முற்றுகையிடப்பட்டுள்ளது.

அங்கிருந்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் ஒரு இலட்சத்து 80 ஆயிரம் மில்லி லீற்றர் கோடா மற்றும் உபகரணங்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பொலிஸாருக்கிடைத்த இரகசியத் தகவலையடுத்து பொலிஸ் பரிசோதகர் எம்ஐஏ. வஹாப் தலைமையிலான குழுவினர் இம்முற்றுகை நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

கைது செய்யப்பட்ட நபர் ஏறாவூர் சுற்றுலா நீதிமன்றில் ஆஜர்செய்யப்பட்டதையடுத்து பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

இதேவேளை கசிப்பு தயாரிப்பு நிலையத்திலிருந்த மற்றுமொருவர் தப்பியோடிவிட்டதாக பொலிஸார் கூறினர்.